இராமநாதபுறம் மாவட்டம், பரமக்குடி வட்டார ஜமாத்துல் உலமா சபையின் சார்பில் அல்லாஹ்வின் அருள் மழை வேண்டி சிறப்பு தொழுகை நேற்று ஞாயிற்றுக் கிழமை ( 01.09.2013 ) காலை 8.30 மணியளவில் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வட்டார ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் ஜனாப்.முஹம்மது யாஸின் பாகவி தலைமையேற்றார். துணைத் தலைவர் அக்பர் பாட்ஷா மன்பஈ மற்றும் செய்தி தொடர்பாளர் அப்துல் வஹாப் மிஸ்பாகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஜனாப்.ஷாகுல் ஹமீது நூரி அனைவரையும் வரவேற்றார்.
மழை வெண்டி சிறப்பு தொழுகையினை கீழப் பள்ளிவாசல் பேஷ் இமாம் ஹாஜி.ஏ.எஸ்.ஜலாலுதீன் மன்பஈ நடத்தினார். இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ஹாஜி.வலியுல்லா நூரி மழை வேண்டி சிறப்பு துஆ செய்தார். பரமக்குடியில் உள்ள அனைத்து ஜமாத் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியர்களும் தொழுகையில் கலந்து கொண்டு மழை வேண்டி துஆ செய்தனர்.
தகவல் : முதுவை ஹிதாயத் அவர்கள்
FACE BOOK COMMENTS :
- Mustafa Kamal, Mahasin Salha, Abdul Zubair and 44 others like this.
- Keelakarai Ali Batcha கீழக்கரையில் இது போல தொழுகை நடத்த ஜமாஅத்துகளுக்கும், உலமா பெரும் மக்களுக்கு நாட்டமில்லையா அல்லது நம்பிக்கை இல்லையா?
- Sadiq MJ @Kilakkarai Ali Batcha >>> கீழக்கரையில் இது போல தொழுகை நடத்த ஜமாஅத்துகளுக்கும், உலமா பெரும் மக்களுக்கும் நாட்டமில்லையா அல்லது நம்பிக்கை இல்லையா? என்று கேட்பதை விட,
இது பற்றிய ஞானம் இல்லையா என்று கேட்பது கொஞ்சம் நல்லாயிருக்கும் என்று கருதுகிறேன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் தன வாழ்நாளில் தனது அருமைக் குழந்தைகளுக்கோ அல்லது பாசமிகு பேரக் குழந்தைகளுக்கோ கொண்டாடிக் காட்டாத அல்லது தன்னோட இறுதிப் பேருரையிலே எனது மவுத்துக்குப் பிறகு எனக்கு வருடா வருடம் குறிப்பிட்ட இந்த மாதத்திலே இத்தனையாவது பிறையிலே பிறந்த எனக்கு பிறந்த நாள் விழாக் கொண்டாடுங்கள் என்று சொல்லிச்செல்லாத பித்அத்-ஆன செயலை நம்ம ஊரில் அனைத்து ஜமாத்தும் ஒருங்கிணைந்து தொடர் நிகழ்ச்சி நடத்துறதுல காட்டுகிற ஆர்வத்தை இதுபோன்ற சுன்னத்தான செயல்களில் என்னைக்குத்தான் காட்டுவாங்களோ?
>>>முன்னதாக ஒரு பதிவில் நீங்க கூட சொல்லியிருந்தீங்க நம்ம ஊர நம்பிவந்த உலமாக்களுக்கு பிள்ளைகளுக்கு ஓதிக் கொடுப்பது இந்த ஹத்தம் பாத்திஹா என்று செல்வது இதுக்கே நேரம் சரியாக இருக்கு என்று, இந்த சூழ்நிலையிலே அவங்க படித்து வந்த மார்க்க ஞானத்த மேலும் Delelop பண்ண படித்த ஞானத்த பிறருக்கு எத்திவைக்க எங்கே நேரம் இருக்கப்போவுது!!!!!!!!!!!! - Keelakarai Ali Batcha @ Sadiq MJ அன்பு சகோதரரே உங்களின் ஆதங்கத்தை பூரணமாக என்னைப் போன்றவர்களால் உணர முடிகிறது. அதே நேரத்தில் எய்தவனை விட்டு அம்பை நோகும் விதமாக இருக்கிறது. ஜமாஅத் கமிட்டியின் கட்டளையை மீற எந்த ஆலீமுக்கும் திராணி கிடையாது.அவர்களோ வெளியூர் வாசிகள். பிரச்சனை வந்தால் வேறு (இ) மடம் தேடி சென்று விடுவார்கள். ஆனால் ஜமாஅத் கமிட்டியார்.......... ஆனால் இன்று ஊரில் ஒரு சிலவைகளை தவிர அனைத்தும் செயல் இழந்து செயல் படுகின்றன.இறை அச்சம் இன்றி தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்டவர்கள் போல் நாட்டாமை செய்கிறார்கள். ஊர் மக்கள் மழை இன்றி, கிணற்று நீர் வற்றி படும் துயரம் அவர்களுக்கு எங்கே புரியப் போகிறது? நல்லோருக்கும் கெட்டோருக்கும், புல் பூண்டுகளுகளுக்கும், ஐந்தறிவு ஜீவன்களுக்கும் ஒரே நேரத்தில் பயன் அளிக்கக் கூடிய மழை என்னும் ரஹ்மத்தை வேண்டி அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி ஏக நாயனிடம் மன்றாட அவர்களுக்கு நேரமும் இலலை, இதற்காகச் செயல் பட திராணியும் இல்லை . வல்லவனே ,ஏகனே உன்னிடமே கையேந்தி நிற்கிறோம். கருணை புரிவாயாக. ஆமீன்.
- Abdul Zubair ஏன் நம்ம ஊரில் உள்ள ஜமாதுகள்..இது பற்றி கவலை பட வில்லை..அல்லாஹ்தான் இவர்களுக்கு நல்ல புத்திய கொடுககனும்....
- Nizar Nizar ஜமாஅத்காரர்களுக்கு எவன்வீட்டிலே கல்யாணம் நடக்கும்,அல்லது மௌலிது நடக்கும் நல்லாகறியும்,சோறும் சாப்பிட்டுவிட்டு கல்யாணவீட்டிலே கைக்கூலிவாங்கும் பணத்தில் கமிஷனை வான்க்கிட்டுபோகத்தான் காத்துக்கிடப்பானுங்க,இதுக்குதான் நேரமிருக்குமே தவிர அல்லாஹுவின் நல்ல நெறிகளையும்,நபிவழி நடைமுறைகளையும் பின்பற்றி நடப்பதற்கு நேரம் இருக்காது வெட்கம் கெட்ட ஜமாஅத் தலைவனுங்களுக்கும் காரியதரிசிகளுக்கும்.
- Keelakarai Ali Batcha >Nizar Nizarஅன்பு சகோதரரே மீண்டும் பதிவு செய்கிறேன். எய்தவனை விட்டு அம்பை நோகும் விதமாககே உங்கள் கருத்தும் இருக்கிறது. ஒரே ஒரு நிமிடம் யோசியுங்கள்.இப்படி பட்டவர்களை நியமித்தது யார்? இது அவர்கள் குற்றமா? நம்மவர்கள் குற்றமா? மழையை பொழிவிக்காமல் நம்மை சோதிக்கும் ஏகனினின் கோபத்திற்கு ஆளானவர்களின் பட்டியலில் நாமும் குற்றவாளியாக உள்ளேமே!!சிந்திப்போம் செயல்படுவேம்'இனி வரும் காலங்களில், இன்ஷா அல்லா.....ஒரு அன்பான வேண்டுகோள். என்ன தான் இருந்தாலும் அல்லாவின் பள்ளியை நிர்வகிக்க நம்மின் அறிவில்லாத் தன்மையால் நியமிக்கப்பட்டவர்கள். வார்த்தைகளில் அடக்கம் தேவை.சகோதரரே. என் வர்த்தையில் குறை கண்டால் அல்லாவின் பெய்ரால் பொருத்தருளவும்.
- Nizar Nizar அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் அலி பாட்சா அவர்களே,நான் யாரையும் புண்படும்படி சொல்லிருந்தால் மன்னிக்கவும். மேலும் தாங்கள் சொல்லியதுபோல் அறிவிழிகளை பள்ளிகளில் நிர்வாகிகளாக நியமித்தது நம்மக்களின் தவறுதான் இருப்பினும் அவர்கள் என்னசெய்யவேண்டும் பொதுமக்கள் தவறான பாதையில் சென்றால் அவர்களுக்கு நல்ல அமல்களையும், மார்க்கங்களையும் எடுத்து சொல்லி நல்வழிபடுத்த வேண்டுமே தவிர அவர்களும் சேர்ந்து பாவசெயல்களை செய்யகூடாது அல்லவா?ஆனால் ஊரில் உள்ள பள்ளிகளில் இருக்கும் தலைவர்களுக்கு எத்தனை பேருக்கு மார்க்கம் என்றால் என்ன? எப்படி?அதை கடைபிடிப்பது என்று தெரியும்? சொல்லுங்கள் ஜனாப் அலி பாட்சா.அரபு நாடுகளில் ஏன் மழை வேண்டி தொழுகை நடத்துகின்றனர்? அவர்களிடம் இல்லாத பணமா?அவர்கள் நினைத்தால் மேகத்தை உருவாக்கி செயற்கை மழை பெய்விக்க முடியும்.ஆனால் அந்த நாட்டின் மன்னர் முதல் அன்றாடம் உழைக்கும் தொழிலாளியும் சேர்ந்து மழை வேண்டி அல்லாஹுவிடம் தொழுது துவா செய்கிறார்களே ஏன்? அந்த எண்ணம் நமது ஜமாத்தார்களிடம் ஏன் இல்லாமல் போய்விட்டது அவர்கள் சரியான பாதையில் சென்றால் நம் மக்களும் சரியானபாதையில் செல்வார்கள்.பொதுமக்களிடம் அவர்கள் நாம் பாவகாரியங்கள் செய்யக்கூடாது இறைவனின் பாதையில் நாம் எல்லோரும் தொழுது பாவகாரியங்களுக்கு அல்லாஹுவிடம் மன்னிப்புகேட்ப்போம் அனைவரும் ஒன்று கூடி வாருங்கள் என்று அழைத்தால் மக்கள் வரமாட்டார்களா? அவர்களுக்கு அதற்க்கெல்லாம் நேரமில்லை சகோதரரே.பணம் கொடுத்து கூப்பிட்டால் உடனே தலைவர்கள் முதல் ஆலிமுசா வரை உடனே வருவார்கள்.எல்லாம் பணம்,பணம்,தான்.இதற்க்கு காரணம் நாம்தான்.மக்களாகிய நாமும் முதலில் திருந்தவேண்டும். வஸ்ஸலாம்.
- Keelakarai Ali Batcha > Nizar Nizar வ அலைக்கும் வஸ்ஸலாம். அன்பு சகோதரரே மீண்டும் கூறுகிறேன் தங்களின் ஆதங்கத்தில் முழு மனதுடன் பங்கு கொள்கிறேன்.இதை அனவரும் சிந்திக்கும் வண்ணம் எனது முக நூல் அன்பர்களுக்கும், கீழ்க்கரை டவுன் காஜிக்கும் எத்த வைக்கிறேன்.இனி வரும் காலங்களில் நல்லது மட்டும் நடக்க ஏக நாயனை பிரார்த்திப்போமாக ஆமீன்.
- Keelakarai Ali Batcha > Nizar Nizar வ அலைக்கும் வஸ்ஸலாம். ஊர் மக்களாகிய நாம் மாக்களாக இருந்து நிலை கெட்ட ஜமாஅத் நிர்வாகிகளை மட்டுமா தேர்ந்தெடுத்தோம்? நகராட்சிக்கு மக்கள் பிரதிநிதிகளாக தெரு வாசிகளை தேர்ந்தெடுத்ததிலும் முட்டாள் தனம் செய்தோமே? கடந்த காலங்களைப் போல் இல்லாமல் இந்த இரண்டு ஆண்டுகாலத்திற்கு மத்திய , மாநில மற்றும் வரி வசூலிப்பிலிருந்தும் சுமார் எட்டு கோடி ரூபாய் மக்கள நல வாழ்வினை மேம்படுத்துவதற்காக நிதி ஆதாரம் கிடைதுள்ளதே.ஆனால் என்ன நடந்து கொண்டிருக்கிறது? குறைந்த பட்சம் வாறுகால்களை அனத்தையும் மூடி சுகாதாரம் பேணப்பட்டதா?இல்லையே.சாலகள் சீரமைக்கப்பட்டதா இல்லையே? குடிநீர் வினியோகம் ஒழுக்கு படுத்தப்பட்டதா? இல்லையே. எதை விடுவது? எதை எழுதுவது?
- Nizar Nizar சலாம் சகோதரரே,நம்மில் பலருக்கு நான்தான் என்ற தலைக்கணம் நிறைய இருக்கிறது முதலில் அவர்கள் திருந்தவேண்டும் அதுமட்டுமில்லாமல் நம் ஊரில் உள்ள அனைவரும் தான் என்னையும் சேர்த்து தான் திருதி கொள்ள வேண்டும்.இன்று நகராட்சியில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சி என்ன என்றால் பொதுமக்களுக்கு சேவை செய்ய ஒரு,ஒரு வேலைக்கும் ஒவ்வொரு விதமான தொகையை நிர்ணயித்து இருக்கிறார்கள் இதை தட்டி கேட்க யாருமே இல்லயா?நேற்றைய சாதரணமாக இருந்த இன்றைய நகராட்சி தலைவர் இரண்டு வருடத்தில் எத்தனை கோடி சம்பாதித்து விட்டார் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஊருக்கெல்லாம் வெளிச்சம் போடா கொடுத்த பணத்திலே தன் வீட்டிற்கு இன்வேர்டார் வாங்கிகொண்டார் அந்தப்பணத்தில்,ரோடு போடுறோம்,ரோடுபோடுரோமுன்னு சொல்லியே அவங்க வீட்டுக்கு மரபிலும்,மோசிக்கும் போட்டுக்கொண்டார்கள் என்ன செய்ய நாம் தான் இளிச்சவாயன்களா இருக்கிறோம். இதற்க்கெல்லாம் ஒரு விடிவுகாலம் வராதா?
- Hussain Jahangeer பள்ளிவாசலின் நிர்வாகத்திற்கு பொறுப்பாளியாக இருப்பதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று தற்போதைய ஒவ்வொரு பள்ளியின் நிர்வாகிகளும் தத்தமது மனச்சாட்சியை கேட்டுப்பார்க்க வேண்டும்?நம் உயிரினும் மேலான அண்ணல் நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ள பண்புகளில் ஏதேனும் ஒன்றாவது நம்மிடம் உள்ளதா?என்பதை கொஞ்சம் யோசித்தால் போதும்,நிறைய பள்ளிகளின் நிர்வாகம் கலைக்கப்பட்டுவிடும்.கியாமத் நாளின் அடையாளத்திற்குரிய தகுதிகளின் அடிப்படையிலேயே பெரும்பாலான பள்ளிகளின் பொறுப்பாளர்கள் நியமிக்கப் படுகிறார்கள்!
- Nizar Nizar ஜஹாங்கிர் அவர்களே,கியாமத் நாள் இருக்கிறது என்ற நினைப்போ,பயமோ இல்லாமல்தான் இன்றைய பல பள்ளிவாசல்களில் உள்ள நிர்வாகிகள் மற்றும் ஆலிம்களும் இருக்கிறார்கள். சொந்தவூரில் பிறந்து வளர்ந்த நாம் எல்லோரும் நம் குடும்பத்தினர்களின் நலன்கருதி ஊர்விட்டு,நாடுவிட்டு நாடுவந்து கஷ்ட்டப்பட்டு பணம் சம்பாதிக்கிறோம்.ஆனால் வெளிஊர்களில் இருந்து நேற்று வந்த ஆலிமுசாக்கள் எல்லோரும் இன்று எவ்வளவு வசதிகளுடன் ஊரில் வாழுகிறார்கள் காரணம் அல்லாஹுவுக்காக நாம் ஓதும் குரான்ஷரீப் நமக்காக செய்யும் துவாவுக்கும் விலை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள் இதற்க்கெல்லாம் அல்லாஹுவிடம் மறுமை அவர்கள் நாளில் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
கீழக்கரையில் இது போல தொழுகை நடத்த ஜமாஅத்துகளுக்கும், உலமா பெரும் மக்களுக்கு நாட்டமில்லையா அல்லது நம்பிக்கை இல்லையா?
ReplyDelete