சாலை விபத்து முக்கியமான உயிர்க்கொல்லி நோயாக உலகளவில் உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. நம் கீழக்கரை நகரிலும் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கேற்ப, விபத்துக்களும் மிக அதிகமாக நடந்த கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன், கீழக்கரை நடுத்தெரு ஜமாத் ஆடறுத்தான் தெருவை சேர்ந்த காதர் மீரா சாகிப் என்பவரின் மகன் செய்யது சாகுல் ஹமீது (வயது 22) இரவு பைக்கில் இராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது ஆர் எஸ் மடை அருகே விபத்துக்குள்ளாகி, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் நேற்று முன் தினம் காலமானார்.
இதே போல் தினமும் பலர் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். "விபத்துக்களை தவிர்க்க போக்குவரத்து விதிமுறைகளை கடைப் பிடியுங்கள். பைக்கில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள்" என காவல் துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இருந்தாலும் நம் கீழக்கரையில் நாளொன்றுக்கு குறைந்தது இரண்டு, மூன்று விபத்துக்களாவது நடந்து விடுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் வாரத்தில் நான்கைந்து பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர்.
இருப்பினும் நம் கீழக்கரை பகுதியில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கிறது. இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கோடு கடந்த மார்ச் மாதம் மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தினரும் காவல் துறையினரும் இணைந்து ஹெல்மெட் விழிப்புணர்வுப் பேரணி நடத்துவதாக இருந்தது.
மொத்தமாக மூன்று ஹெல்மெட்கள் மட்டுமே இருந்ததால் பேரணி கை விடப்பட்டது. இப்போது பல்வேறு கோர விபத்துக்களை கீழக்கரை மக்கள் சந்தித்த பின்னர், மீண்டும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
'எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்' என்பது பழமொழி. நம் உடல் உறுப்புகளை செயல்படுத்தும் ஒட்டு மொத்த கன்ட்ரோல் நம் தலையில் இருக்கக்கூடிய மூளையாகும். இதன் மொத்த எடை 1.5 கிலோ ஆகும். 100 கிலோவிற்கு மேல் உள்ள மனிதனுக்கும் இதே அளவுதான். தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திக்கும் திறன், அனுமானித்தல், கேட்டறிதல், செயல்படுத்துதல், கட்டளையிடுதல், செக்ஸ் உணர்வுகள் போன்ற பல்வேறு விதமான செயல்பாடுகளை செய்வது இந்த மூளைதான்.
இந்த மூளையை காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் நம் அனைவருக்கும் தலையாய கடமையாகும். இந்த மூளை அதிகமாக பாதிக்கப்படுவது சாலை விபத்தில் தான். 50 சதவீத சாலை விபத்து ஓட்டுனரின் கவனக்குறைவு, மது அருந்தி வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது தான் முக்கிய காரணங்களாகும்.

பல ஆயிரங்கள் கொடுத்து, தனக்கு பிடித்த மாடல் பைக்குகளுக்காக மட்டும் பல மாதங்கள் காத்திருந்து வாங்கும் இன்றைய இளைய சமுதாயத்தினர் ஒரு ஆயிரம் செலவழித்து ஹெல்மெட் வாங்க முயற்சிப்பதில்லை.
ஹெல்மெட்டுகளை கடன்காரன் தான் அணிந்து ஊருக்குள் நடமாடுவான். எங்களுக்கு தேவையில்லை என்று எகத்தாளம் பேசுபவர்களும் உண்டு. ஹெல்மெட் அணிவதை கேவலமாகவும், கவுரவ குறைச்சலாகவும் பார்ப்பது வருத்தத்திற்குரியது. ஆகவே 'வரு முன் காப்பது' சாலை விபத்தினால் ஏற்படும் மூளைக்காயத்திற்கு சாலச்சிறந்தது.
இது குறித்து கீழக்கரை காவல் ஆய்வாளர் இளங்கோவன் அவர்கள் கூறும் போது, "நமது கீழக்கரை நகரில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவது விரல் விட்டு எண்ணக் கூடிய நபர்கள் மட்டுமே என்பது வருத்தத்துக்குரிய விஷயம். அதிலும் சில பேர்கள் ஹெல்மெட்டை வண்டியில் மாட்டி விட்டுட்டு தான் ஓட்டுறாங்க. இந்த இரு சக்கர வாகனங்கள் ஓட்டி ஏற்படும் விபத்துக்களில் பெரும்பாலும் தலைக்காயத்துனால தான் நிறைய உயிர் பலிகள் நடக்கிறது. தலைக்காயத்தை முழுமையாக தடுக்கவே இந்த ஹெல்மெட். எனவே இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தவறாது ஹெல்மெட் அணிய வேண்டும்." என்று தெரிவித்தார்.
இது குறித்து கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழக இணைச் செயலாளர் செய்யது சாகுல் ஹமீது அவர்கள் கூறும் போது "தினந்தோறும் நாளிதழ்களில் இரு சக்கர வாகன விபத்துக்களில் பலியாகிறவர்கள் பற்றி செய்திகள் வரும் போது 'ஹெல்மெட் அணியவில்லை' என்று அடைப்புக் குறியிட்டு செய்தி வெளியிட்டிருப்பார்கள். அதற்கான காரணம் இது போன்ற விபத்துக்களில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டி இறந்து விட்டார்கள் என்றால் இன்சூரன்ஸ் கம்பெனி பொறுப்பு ஆகாது. அதாவது இன்சூரன்ஸ் பணம் தர மாட்டாங்க.
அதற்கு அத்தாட்சியாகத் தான் அந்த பேப்பர் நியூஸ். ஹெல்மெட் போட்டிருந்தா மட்டும் தலையில அடிபடாமலா இருக்கப் போகுது? என வியாக்கியானம் பேசுறவங்க பேசிட்டே தான் இருப்பாங்க. அதேல்லாம் கவனத்துல எடுத்துக்காம நமக்காக, நம்ம குடும்பத்துக்காக ஹெல்மெட்டை வண்டிக்கு மாட்டாம, நம்ம தலையில மாட்டுவோம்." என்று தன் வருத்தத்தை பதிவு செய்தார்.

நண்பனே
வேகம் குறை…
உன்னை விரட்டுவது
விதியாகக் கூட இருக்கலாம்..!
உன் பைக்கில்
உருள்வது சக்கரங்களா ?
சாவின் கரங்களா ?
உனக்காகக் காத்திருப்பவைகளை
உணராமல்,
நீ காத்திருக்கும் மரணத்தை
எட்டிப் பிடிக்க
ஏன் இந்த வேகம் ??
விவேகத்தைக் காட்டு..
வேகத்தைக் கூட்டாதே...