பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள், இன்று (31ம் தேதி), காலை, 9.15 மணிக்கு வெளியானது. தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொது தேர்வு, மார்ச், 27ம் தேதி துவங்கி, ஏப்ரல், 12ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 5,43,152 பேர் மாணவர்கள்; 5,25,686 பேர் மாணவியர் என, மொத்தம், 10 லட்சத்து, 68 ஆயிரத்து, 838 பேர் தேர்வு எழுதினர்.கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வெழுதி, முடிவுகளுக்காக காத்திருந்தனர்.
தற்போது கிடைத்திருக்கும் முடிவுகளின் அடிப்படையில் கீழக்கரை மேலத் தெரு, ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் பயின்ற மாணவி J.ரபீகத் சுஹைனா அவர்கள் '490 மதிப்பெண்கள்' பெற்று கீழக்கரை நகரில் முதலிடம் பெற்று இருக்கிறார். இவர் கீழக்கரை சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்த ஜலால் இபுறாஹீம் அவர்களின் மகளார் என்பதும் அலி ஹுசைன் அவர்களின் மருமகளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
மாணவி J.ரபீகத் சுஹைனா அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு :
தமிழ் : 94
ஆங்கிலம் : 98
கணிதம் : 100
அறிவியியல் : 98
சமூக அறிவியியல் : 100
ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் நலிஃபா 478 மதிப்பெண்களும், ஆயிசத் நபிலா 478 மதிப்பெண்களும் பெற்று பள்ளியில் இருவரும் இணைந்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்கள். ரஸ்மின் 475 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்
இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவி ஹலிமா 484 மதிப்பெண்களும், அப்ரிடீன் 481 மதிப்பெண்களும், மவ்ஃபீகா 481 மதிப்பெண்களும், பாத்திமா சமிஹா 479 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலை பள்ளி மாணவி சுஸ்மா 480 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதலிடம் பெற்றுள்ளார்.
மக்தூமியா உயர் நிலைப் பள்ளி, இந்த வருடமும் பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்று இருக்கிறது. மாணவி நிலோபார் நிஷா அவர்கள் 455 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவர் சீனி சேக் முஹம்மது அவர்கள் 446 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளார். மூன்றாமிடத்தை 443 மதிப்பெண்கள் பெற்று மாணவி ஜைத்தூன் அவர்கள் பெற்றுள்ளார்.
முஹைதீனியா பள்ளியில் ஜாவித் ரிபாய் மற்றும் அப்ரினா பானு ஆகியோர் தலா 446 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இருவரும் முதலிடம் பெற்றுள்ளனர்.
தீனியா பள்ளி மாணவி ராலியா அவர்கள் 454 பெற்றுள்ளார்.
மேலும் இஸ்லாமியா உயர் நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண்ணாக 477 இருக்கிறது. இந்த பள்ளி தொடர்ந்து எட்டு வருடமாக 100% தேர்ச்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஹமீதியா பள்ளிகளின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
(கடந்த 2012 ஆம் ஆண்டுடன் ஓர் ஒப்பீடு)
(தகவல் : உஸ்வத்துன் ஹசனா முஸ்லீம் சங்கம், மேலத் தெரு, கீழக்கரை)
(கடந்த 2012 ஆம் ஆண்டுடன் ஓர் ஒப்பீடு)
(தகவல் : உஸ்வத்துன் ஹசனா முஸ்லீம் சங்கம், மேலத் தெரு, கீழக்கரை)
கீழக்கரை நகரிலேயே சமூக அறிவியியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற இரண்டு மாணவிகளான S.ஆயிசத் நுஹைலா அவர்களும், கீழக்கரை நகரின் முதலிடம் பெற்ற J.ரபீகத் சுஹைனா அவர்களும் ஹமீதியா மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவிகள் ஆவர்.
கீழக்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது அவர்களின் மகளார், மாணவி ஆயிசத் நுஹைலா அவர்கள் 472 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே வெளி வந்த +2 தேர்வு முடிவுகளின் அடிப்படையில் கீழக்கரை நகரில் ஹமீதியா மெட்ரிக் பள்ளி மாணவியே முதலிடம் பிடித்தது குறித்து நாம் முன்னதாக வெளியிட்டிருந்த செய்தியை காண கீழே உள்ள லிங்கை சொடுக்கி பார்வையிடவும்.
கீழக்கரை நகரில் 'ஹமீதியா மெட்ரிக்குலேஷன் பள்ளி' மாணவி + 2 தேர்வில் முதலிடம் !
வெற்றி பெற்ற அனைவருக்கும் கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அரசு இணைய தளங்களில் முடிவுகளை காண பின் வரும் ஏதேனும் ஒரு லிங்கை சொடுக்கி காணலாம்.
www.dge3.tn.nic.in
FACE BOOK COMMENTS :
- Jaga Deesh, Riffan Zyed, சின்னக்கடை நண்பர்கள் and13 others like this.
- கீழக்கரை 'புதிய ஒற்றுமை' வாழ்த்துகள் மாணவ மணிகளே.. வளமான எதிர்காலத்தையும், உபயோகமான கல்வியையும், நலமான வாழ்வையும், வெற்றியான வாழ்வையும் இவ்வுலகிலும் மறு உலகிலும் வல்லோன் அல்லாஹ் வழங்குவானாக.. ஆமீன்
- Jaffar Nainaமாஷாஅல்லாமனம்நிறைந்தமகிழ்ச்சிவாழ்த்தவயதில்லை
- சின்னக்கடை நண்பர்கள் Good News.. We wish u all students those who r passed in 10th examination andour special congratulations to Kilakarai first 'Rafeekath suhainaa