கீழக்கரையில் கடந்த ஆண்டு ஆரம்பத்தில், மக்கள் சேவைக்காக, சமூக நல
விரும்பிகளால் 'கீழக்கரை நகர் நல இயக்கம்' என்ற பெயரில் தொண்டு
அமைப்பு துவங்கப்பட்டு, வெகு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம்
கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில், கீழக்கரையில் பல்வேறு
துறைகளில்
சிறப்பாக செயல்பட்டவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், சமூக
ஆர்வலர்களை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் கீழக்கரை நகர் நல
இயக்கம் சிறந்த சமூக சேவைக்கான விருதினை பெற்றது. ரோட்டரி மாவட்ட
கவர்னர் ஷாஜஹான்
விருதுகளை வழங்கினார். நகர் நல இயக்கத்தின் நிறுவனர். K.T.M.S. ஹமீது அப்துல்
காதர் அவர்கள் விருதினை பெற்றுக் கொண்டார். இதில் சதக் கல்லூரி
முதல்வர் அலாவுதீன்
வரவேற்புரை நிகழ்த்தினார். ரோட்டரி சங்க கீழக்கரை தலைவர் ஆசாத்
நிகழ்ச்சி சிறப்புற அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
மேலும் இந்த
விழாவில் இயக்கத்தின் செயலாளர் ஜனாப். பசீர் அகமது, பொருளாளர் ஜனாப்.ஹாஜா
அனீஸ் ஆகியோர்கள் கவுரவிக்கப்பட்டனர். இயக்கத்தின் உறுப்பினரும் அ.தி.மு.க
நகர் செயலாளருமான திர.இராஜேந்திரன், நிர்வாகிகள் திர.பாரதி, திரு.விஜயன்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதே போல் கடந்த மாதம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பாக, புற்று
நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்கான மறு வாழ்விற்கும், மேல்
சிகிச்சைக்கும் நிதி திரட்டுவதற்காக இசை நிகழ்ச்சி ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.
அந்த நிகழ்விற்காக, கீழக்கரை பகுதியில் நிதி திரட்டி பேருதவிகள் புரிந்தமைக்காக, மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனர். திரு சேது ராமன், கீழக்கரை நகர் நல இயக்கத்தின் பொருளாளர் ஜனாப்.ஹாஜா அனீஸ் அவர்களுக்கு விருதும், பாராட்டுப் பத்திரமும் வழங்கி கவுரவித்தனர்
கீழக்கரை நகரில் சமூக சேவைகளில் சிறப்பான தொண்டாற்றி வரும் 'கீழக்கரை நகர் நல இயக்கம்' மென் மேலும் மக்கள் பணிகளில் சேவைகள் பல புரிய, கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.