கீழக்கரை நகராட்சிக்கு மத்திய மாநில அரசுகள் ஒதுக்கும் நிதிகள் குறித்தோ, நகராட்சியில் நடை பெற்று வந்த மக்கள் நலப் பணிகள் குறித்தோ, அதிகாரத்தில் இருந்து வந்தவர்கள் அடித்து வந்த கொள்ளைகள் குறித்தோ, மக்கள் வரிப் பணம் தவறான வழியில் வீணடிக்கப்படுவது சம்பந்தமாகவோ, கடந்த 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை எவ்வித தகவலும் பொது மக்களுக்கு தெரியாமலே இருந்து வந்தது.
தகவல் அறியும் உரிமை சட்டம் நடை முறைக்கு வந்த பின்னர் பொது நல விரும்பிகளும், சமூக ஆர்வலர்களும், கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் உண்மையான செயல்பாடுகளை அறியும் நோக்கோடு, இந்த சட்டத்தின் வாயிலாக பல்வேறு ஆக்கப்பூர்வமாக கேள்விகளை கேட்டு வருகின்றனர். இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக, கீழக்கரை நகராட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எவ்வித பதிலும் அளிக்கப்படாமல், மனுதாரர் (கீழை இளையவன்) மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டார்.
முதல் மேல் முறையீடு
இதனையடுத்து, கடந்த இரண்டாண்டு காலமாக, உரிய பதில் தராமல் அலைக்கழிப்பு செய்து வரும் கீழக்கரை நகராட்சியின் பொது தகவல் அலுவலரிடம் இருந்து இழப்பீடு பெற்று தரும் படி மாநில தகவல் ஆணையத்திற்கு, மனுதாரரால் புகார் செய்யப்பட்டது. அதனை ஏற்ற மாநில தகவல் ஆணையம், கீழக்கரை நகராட்சி மனுதாரருக்கு உடனடியாக பதில் அளிக்க கடந்த 22.07.2012 அன்று ஆணை பிறப்பித்தது.
ஆணை
அதன் பின்னரும் பதில் கிடைக்காததால், மீண்டும் மனுதாரரால் மாநில தகவல் ஆணையத்திற்கு புகார் செய்யப்பட்டது.
கீழக்கரை நகராட்சி மீது ஆணையத்தில் புகார்
சம்மன் (அழைப்பாணை)
தீர்ப்பு
அதில் கீழக்கரை நகராட்சி, மனுதாரருக்கு உரிய முறையில் பதில் அனுப்ப தவறியமைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 06.08.203 அன்று மனுதாரருக்கு கீழக்கரை நகராட்சி தகவல் அனுப்பியுள்ளதை ஆணையம் ஏற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் தீர்ப்பின் சாரத்தில் திருப்தியுறாத மனுதாரர் (கீழை இளையவன்) சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் (தகவல் மேலாண்மை ஒழுங்கு முறை விதிகள் 2007) பிரிவு 23 இன் படி இவ்வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பினை மறு ஆய்வு செய்ய வேண்டியும், மேல் முறையீட்டிற்கான சிறப்பு அனுமதி வேண்டியும் மாநில தகவல் ஆணையத்திற்கு மனு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ரீதியாக சரியான நடவடிக்கை எடுத்துள்ளார் திரு .AMD முஹம்மத் சாலிஹு ஹுசைன் ,அவர்களின் அறிவு திறமையும் , தைரியத்தையும் , பாராடிகொள்கிறேன்,இது போன்று பொது மக்களை உதாசீனம் படுத்தும் அரசு உழியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க மக்கள் முன் வர வேண்டும் ,ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் அணைத்து மக்களிடமும் லஞ்சம் கேட்டு மிரட்டும் அரசு உழியர்களின் மீதும் சட்டம் ரீதியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் ,
ReplyDeleteஇது போன்று, புதிய குடும்ப அட்டைக்காக மனு கொடுத்து பல வருடம் ஆகியும் குடும்ப அட்டை கிடைக்காத பொது மக்கள் இது போன்ற தகவல் அறியும் சட்டத்தின் மூலம் புகார் தெரிவித்து குடும்ப அட்டைனை பெற்றுக்கொள்ளலாம் ,
ReplyDeleteஅற்புதம்
ReplyDeleteஅற்புதமான வேலை செய்து இருகிறிர்கள் இவர்களை போல் பொதுமக்களை அழசியம் செய்பவர்களை இப்படித்தான் தோலுரித்து காட்ட வேண்டும் நன்றி
ReplyDeleteபோராடுவது உந்தன் பிறவி குணம்.கீழை இளையவன் வளைத் தளத்தை (மற்றும் www.keelaitalks.com) தொடர்ச்சியாக உந்தன் பதிவுகளை பார்வை இடுபவர்களுக்கு அது புரியும் .இறுதி வெற்றி கிடைக்கும் வரை போராடு.சட்டத்தை மதிக்காத, உயர் அதிகாரிகளுக்கு பணியாத மக்கள் வரி பணத்திலிருந்து கிடைக்கும் ஊதியம் பெற்று ஜீவனம் நடத்தும் திமிர் பிடித்தவர்களின் ஆணவம் அடங்கும் வரை போராடு. நிச்சயமாக இறுதி வெற்றி உனதே.இது சத்தியம். பலன் எதிர்பாராது மக்கள் சேவை செய்ய உழைக்கும் உமக்கு நிச்சயமாக அல்லாவின் கூலி உண்டு.அதற்காக நானும், உம்மை அறிந்தவர்களும் இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போம்.ஆமீன்
ReplyDeleteபோராடுவது உந்தன் பிறவி குணம்.கீழை இளையவன் வளைத் தளத்தை (மற்றும் www.keelaitalks.com) தொடர்ச்சியாக உந்தன் பதிவுகளை பார்வை இடுபவர்களுக்கு அது புரியும் .இறுதி வெற்றி கிடைக்கும் வரை போராடு.சட்டத்தை மதிக்காத, உயர் அதிகாரிகளுக்கு பணியாத மக்கள் வரி பணத்திலிருந்து கிடைக்கும் ஊதியம் பெற்று ஜீவனம் நடத்தும் திமிர் பிடித்தவர்களின் ஆணவம் அடங்கும் வரை போராடு. நிச்சயமாக இறுதி வெற்றி உனதே.இது சத்தியம். பலன் எதிர்பாராது மக்கள் சேவை செய்ய உழைக்கும் உமக்கு நிச்சயமாக அல்லாவின் கூலி உண்டு.அதற்காக நானும், உம்மை அறிந்தவர்களும் இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போம்.ஆமீன்
ReplyDeleteஇதற்காக சென்னை வரை சென்று மிகுந்த அலைச்சலுக்கு உள்ளா ஆக்கிய அரசு ஊழியர்களை சும்மா விட கூடாது, எனவே தாமதப்படுத்தியதற்கு அவர்களுக்கு எச்சரிக்கை மட்டும் போதாது.சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே இவ்வழக்கில் மேல் முறையீடு தயவு செய்து செய்ய வேண்டும் ,அப்பொழுது தான் சமந்த பட்ட ஊழியர்க்கும் மற்ற ஊழியர்க்கும் நல்ல படிப்பினையாக இருக்கும், சமந்த பட்ட ஊழியர் மீது நீதி மன்றம் மூலம் நஷ்டம் ஈடு பெற வேண்டும் ,இவ்வளவு தூரம் நீங்கள் கஷ்டம் பட்டத்திற்கான முழு வெற்றின் பயன் கிடைக்கும் ,
ReplyDeleteமக்களை அலைய வைக்கும் அனைவருக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும்.தகவல் ஆணையம் மூலம் நமது உரிமைகளை தகவல்களாக பெற யாரேனும் விரும்பினார்ல் அதற்குண்டான வழிமுறைகளை காட்டி தர தயராக உள்ளேன் என்று நீங்கள் கூறி உள்ளது மிகவும் பாராடகூரியது , உங்களுக்கு எனது நன்றிம் , நமது ஊர் மக்களின் சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ,
இது போன்று லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கும் நல்ல பாடம் கற்பிற்க வேண்டும் , நமது ஊர் மக்கள் புதிய ரேஷன் கார்ட்க்கு (குடும்ப அட்டை) மனு கொடுத்து பல வருடங்கள் காத்து கிடக்கிறர்கள் எந்த ஒரு பதிலும் இல்லாமல் ,இவர்களுக்கு தக்க வழிகாட்டுதல்களை நீங்கள் கொடுத்தால் அவர்களுக்கு மிகவும் உதவிய இருக்கும் , உங்களுக்கும் மிக நன்மையாகவும் இருக்கும் ,
nice work tambi
ReplyDelete