தமிழகத்தில் கிராமப் புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளதைப் போல,
நகர்ப் புறத்திலுள்ள ஏழை மக்களும் பயனடையும் நோக்குடன், நகர்ப்புற ஆரம்ப
சுகாதார நிலையங்கள் தமிழகத்தின் அனைத்து நகராட்சிப் பகுதிகளிலும்
துவக்கப்பட வேண்டும் என மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்
உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், கீழக்கரை நகராட்சியில் ஆரம்ப சுகாதார
நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்கு, நகர்மன்றம் சார்பாகவும், சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இறுதியில், தற்காலிக கட்டிடத்தில் தற்போது ஆரம்ப சுகாதர நிலையத்தைத் துவக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான துவக்க விழா கீழக்கரை கிழக்குத் தெரு சேகு அப்பா பள்ளி அருகாமையில் தமிழக அரசின் 'நகர்ப் புற ஆரம்ப சுகாதார நிலையம்' இன்று காலை 10.30 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. நந்தகுமார் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது. இந்த சுகாதார மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பணிகளை இனிதே துவங்கி இருப்பதால், பொது மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் பாலசுப்பிரமணியன், கீழக்கரை நகராட்சி கமிஷனர் முகம்மது முகைதீன், நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா, துணை தலைவர் ஹாஜா முகைதீன், அரசு மருத்துவர் ராசிக்தீன், பல்வேறு ஜமாத் நிர்வாகிகள், கவுன்சிலர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து துணை இயக்குநர் பாலசுப்பிரமணியன் அவர்கள் கூறும் போது "இங்கு திறக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஒரு பொது மருத்துவர் மற்றும் நான்கு செவிலியர்களுடன் 24 மணி நேரம் செயல்படும். எப்போது வேண்டுமானாலும் பொதுமக்கள் இங்கு வந்து, இலவச சிகிச்சைகளை உடனுக்குடன் பெற்று பயன் பெறலாம். மேலும் ஊரின் மத்திய பகுதியில், இன்னும் பெரிய கட்டிடம் கிடைத்தால், இன்னும் அதிக வசதிகளுடன் அறுவை சிகிச்சை அரங்கத்துடன் ஆரம்ப சுகாதார நிலையம் விரிவுபடுத்தப்படும்." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.