கீழக்கரைவாசிகள் பொருளாதாரத்தைத் தேடி... வளைகுடாக்களில் கால் பதிக்க, ஆரம்ப கால கட்டங்களில், ஆணி வேராய்... அர்பணிப்போடு அழுத்தமாய் நின்று.. அடித்தளமிட்ட அரும்பெரும் மனிதர் 'பி.எஸ்.அப்துல் ரஹ்மான் காக்கா' என்றால் அது மிகையாகாது. பி. எஸ்.ஏ . அப்துல் ரஹ்மான் அவர்களை பற்றி தமிழ்நாட்டில் தொழில் துறைகளில் சம்மந்த பட்டவர்கள் தெரியாதவர்களே இருக்க முடியாது துபாயில் ETA நிறுவனத்தை உருவாக்கி, பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு உழைப்பை தந்தவர்.
அது மட்டுமல்லாது, சென்னை வண்டலூர் கிரசன்ட் கல்லூரி, கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுரி மற்றும் பள்ளிகூடங்கள் நிறுவி கல்வி பணியிலும் முத்திரை பதித்து கீழக்கரை நகரின் கல்வித் தந்தையாக திகழ்பவர். பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்கள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மிக நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட பி.எஸ்.ஏ. அவர்களின் வாழ்க்கை வரலாறு பேசும் "அன்பின் முகவரி அப்துர் ரஹ்மான்" எனும் நூல் வெளி வந்திருக்கும் தகவலை, நூல் ஆசிரியரும், எழுத்தாளருமான திருச்சி. செய்யது அவர்கள் வெளியிட்டுள்ளார்.
கடின உழைப்பாலும் களங்கமற்ற நேர்மையாலும், நிகரற்ற அன்பாலும் நேரிய ஆளுமையாலும், மேற்கத்திய நாடுகளும், கீழக்கரையை வியப்புடன் நோக்க செய்த அற்புத சாதனையாளரான பி.எஸ்.ஏ. அவர்களின் அற்புத வாழ்க்கை வரலாறு நாம் படிப்பதற்கு மட்டுமல்ல.. நாளைய தலை முறையினருக்கு பாடமாகும் இருக்கிறது.
வாழ்வில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு நல்ல கருத்துக்களைச் சொல்லும் பயனுள்ள இந்த நூலில் வரும் ஒவ்வொரு சம்பவத்திலும் ஒரு பயனுள்ள நீதி உண்டு. ஆகவே இந் நூலை நீங்கள் மட்டும் படிக்காமல், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். 600 பக்கங்கள் கொண்ட இந்நூல் ரூபாய் 600 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
"அன்பின் முகவரி அப்துர் ரஹ்மான்" நூல் கிடைக்குமிடம்
தாசீம் பீவி அப்துல் காதர் மகளீர் கல்லூரி, கீழக்கரை - 623517,
இராமநாதபுரம் மாவட்டம்
தொலைபேசி எண் : 04567 - 241934 / 241933
தொலைபேசி எண் : 04567 - 241934 / 241933
FACE BOOK COMMENTS :
- கீழக்கரை 'புதிய ஒற்றுமை' மிகச் சிறந்த பண்பாளர்.. கடின உழைப்பால் உயர்ந்த பாட்டாளி.. கீழக்கரை மக்களை வளைகுடா நாடுகளுக்கு வழி காட்டி அழைத்து சென்ற தொழில் சிற்பி ... எல்லாம் வல்ல நாயன் வல்லோன் அல்லாஹ்.. பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், சரீர சுகத்தையும் தந்தருள்வானாக.. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
- Nizar Nizar பல கோடீஸ்வரர்களை உருவாக்கிய ஒரே கோடீஸ்வரர். அல்லாஹ் அவர்களுக்கு மென்மேலும் நல் அருள்புரிவானாக ஆமீன்...
- Abdul Hameed பல கோடீஸ்வரர்களை உருவாக்கிய ஒரே கோடீஸ்வரர். அல்லாஹ் அவர்களுக்கு மென்மேலும் நல் அருள்புரிவானாக ஆமீன்.. இதன் விலை ஏழைகளுக்கு சற்று அதிகம். தமிழகப்பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு குறைந்த விலைக்கு கொடுத்து படித்து பயனடை செய்யலாம். புத்தகத்தை வாங்குவது முக்கியமல்ல படித்து அவரின் பண்புகள் அடைய முயற்சி செய்ய வேண்டும்.