நம் கீழக்கரை பொது மக்கள் வாழ்கையில் அன்றாட நிகழ்ச்சி போல, தங்களது தேவைகளை நிறைவேற்றி கொள்ள அரசு அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை நேரில் சந்திக்க கூடிய சூழ்நிலை உள்ளது. பொது மக்களின் பணிகளை நிறைவேற்ற கடமைப்பட்ட அரசு அதிகாரிகளில் சிலர் லஞ்சத்தை எதிர் பார்த்து, கடமை செய்வது மிகுந்த வேதனை அளிக்கிறது.
இது குறித்து அஹ்மது தெருவை சேர்ந்த சுல்தான் இபுராஹீம் அவர்கள் கூறுகையில், "முறையான ஆவணங்கள் இணைத்து மனு செய்தாலும், லஞ்சம் கொடுக்காமல் வேலை நடப்பது என்பது குதிரை கொம்பாக இருக்கிறது. அப்படியே லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று நாம் அடம் பிடித்தால், அடுத்த தலைமுறை வரை அலைக்கழிப்பு தான் தொடர்கிறது.. அரசு அலுவலகங்களுக்கு நடந்து, நடந்தே மன நோயாளியாவது தான் லஞ்சம் கொடுக்க மறுப்பவர்களுக்கு மிஞ்சுகிறது. ", என்று தன் வருத்தத்தை பதிவு செய்தார்.
கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக இணை செயலாளர், செய்யது சாகுல் ஹமீது அவர்கள் கூறுகையில், "மாட்டி கொள்ளாமல் லஞ்சம் வாங்குவது எப்படி?" என்ற ஆசிரியர் உத்தமனின் புத்தகத்தை படித்து சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும், இந்த லஞ்ச பேர்வழிகளை பிடிக்க, பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவர்களை இனம் காணும் முன், அரசு அலவலக வாசல்களில் லஞ்சப் பணம் பரிமாற, புடை சூழ நிற்கும் புரோக்கர்களை இனம் கண்டு, சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர விழிப்புடன், பொது மக்கள் அனைவரும் முன் வர வேண்டும்.", என்று தெரிவித்தார்.
நம் அரசாங்கம், அரசு அதிகாரிகளுக்கு தகுந்த சம்பளம், சலுகைகள் இன்ன பிற படிகள் என ஆயிரக்கணக்கில் அள்ளி வழங்கினாலும், லஞ்சம் வாங்குவது கொஞ்சம் கூட குறைந்த பாடில்லை. அதே நேரம், நாமும் ஒரே நாளில், காலையில் மனு கொடுத்து, மாலையிலேயே தங்கள் வேலையை முடித்து கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு ஊழியர்களின் கைகளில் லஞ்ச பணத்தை திணிப்பது தவறான அணுகுமுறையாகும்.
நமது கீழக்கரையின் லஞ்ச பேர்வழிகள் பற்றி நீங்கள் தகவல் தர வேண்டிய முகவரி.... உங்கள் தகவல்களின் இரகசியம் பாதுகாக்கப்படும்.
லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு துறை
ஓம் சக்தி நகர், பாரதி நகர்,
இராமநாதபுரம்
தொலை பேசி : 04567 - 230036
"லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும், ஊக்குவிப்பதும் சட்டப்படி குற்றம்
லஞ்சத்தை ஒழிப்போம்.. லஞ்சமில்லாத நம் கீழக்கரை நகரை உருவாக்குவோம்."

கீழை இளையவன் உங்களை கண்டிப்பாக பாராட்டியகவேண்டும் இது மாதிரியான செய்திகளை கண்டடிப்பாக மக்களிடையே விழிபுனர்வு
ReplyDeleteஏற்படுத்தும் , இன்ஷா அல்லாஹ் உங்களுடைய முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் ,உங்கள் பணிகள் தொடர அல்லாஹ் உங்களுடன் இருப்பான் ....
fahim faras
ReplyDeleteReally appreciated your work . You are really courageous to post this type of news .Keep up your gud work .you are not keelai ilzayavan .you are keelai singam
Keelai ilayyavanukku en manamaarntha vaalthukkal...ithu mathiri samooha panikalai thodarnthu seyalpadithida ellam valla allah kirubai seivaanaga....
ReplyDeletenice topic keep it up,v wan more frm u....
ReplyDelete"லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும், ஊக்குவிப்பதும் சட்டப்படி குற்றம்
ReplyDeleteலஞ்சத்தை ஒழிப்போம்.. லஞ்சமில்லாத நம் கீழக்கரை நகரை உருவாக்குவோம்."
இந்த வரிக்க்காகவே உங்களை பாராட்டியே ஆகா வேண்டும்
nice in4mation
ReplyDeleteஇதன் முலம் லஞ்சத்தை ஒழிக்க முயற்சி செய்வதற்கு வாழ்த்துக்கள் ,லஞ்சம் வாங்கும் ஒரு அதிகாரியை பிடித்தாலே ஒரு பெரிய வெற்றி
ReplyDelete