கீழக்கரையில் தொடர் மின் வெட்டை கண்டித்து, தமிழக அரசின் கவனத்திற்கு, இந்த பிரச்சனையை கொண்டு செல்வதற்காக, இன்று (13.02.2012) கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கீழக்கரையில் உள்ள பல்வேறு அமைப்பினரும், சங்க நிர்வாகிகளும், பல்வேறு கட்சித் தொண்டர்களும், தங்கள் கட்சிக் கொடிகளுடன் கலந்து கொண்டு தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர்.
இதில் கண்டன உரையாற்றிய பலரும், கூடங்குளம் அணு உலையை, உடனடியாக திறந்து, மின்சார உற்பத்தியை துவங்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த அணு உலையினை போர்க்கால அடிப்படையில் திறப்பதோடு நில்லாமல், மின்சார உற்பத்திக்கான, இன்னும் பல திட்டங்களை விரைவில் செயல்படுத்த வேண்டுமெனவும் உரையாற்றினர்.
தற்போது தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும், தற்காலிக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதால், இந்த தொடர் மின் வெட்டு இன்னும் கூடுதாலாகும் வாய்ப்பு இருக்கிறது. கடந்த சில நாட்களாக, தமிழகமெங்கும் நடைபெற்று வரும், தொடர் மின் வெட்டை கண்டித்த போராட்டங்களின் விளைவாக, இறைவன் நாடினால், ஆட்சியாளர்களின் வாயிலாக, விரைவில் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதில் மாற்றுகருத்து இல்லை.
"உயிர் பயம் காட்டியே,
அணு உலையின் கதவுகள் அடைக்கப்படுகிறது !
கூடங்குளத்தில்..
அணை மதகுகளின் கதவுகள் திறக்கப்படுகிறது !
முல்லை பெரியாரில்...
நூறாண்டு மட்டும்
வாழ்பவனின் கைரேகை,
கணிக்கப்படுகிறது - உனக்கு
அணு உலையால் தான் மரணமென்று !
கூடங்குளத்தில்..
தொள்ளாயிரம் ஆண்டுகள்
வாழ வேண்டியவனின் ஆயுள் ரேகை,
அழிக்கப்படுகிறது - நீ
வாழ்ந்த வாழ்க்கை போதுமென்று !
முல்லை பெரியாரில்...
மரண நண்பன்
கணப் பொழுதும் நம்முடன் தான்,
காலம் கழிக்கிறான்...
கூடங்குளத்திலும்,
முல்லை பெரியாரிலும் அல்ல !"

கீழை இளையவன் கவிதைகளில் இருந்து சில மேற்கோள்கள்:
"உயிர் பயம் காட்டியே,
அணு உலையின் கதவுகள் அடைக்கப்படுகிறது !
கூடங்குளத்தில்..
அணை மதகுகளின் கதவுகள் திறக்கப்படுகிறது !
முல்லை பெரியாரில்...
நூறாண்டு மட்டும்
வாழ்பவனின் கைரேகை,
கணிக்கப்படுகிறது - உனக்கு
அணு உலையால் தான் மரணமென்று !
கூடங்குளத்தில்..
தொள்ளாயிரம் ஆண்டுகள்
வாழ வேண்டியவனின் ஆயுள் ரேகை,
அழிக்கப்படுகிறது - நீ
வாழ்ந்த வாழ்க்கை போதுமென்று !
முல்லை பெரியாரில்...
மரண நண்பன்
கணப் பொழுதும் நம்முடன் தான்,
காலம் கழிக்கிறான்...
கூடங்குளத்திலும்,
முல்லை பெரியாரிலும் அல்ல !"
No comments:
Post a Comment