இந்திய அரசின் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகமும், ITCOT நிறுவனமும் இணைந்து SGSY ('ஸ்வர்ண ஜெயந்தி கிராம் ஸ்வரோஸ்கார் யோஜனா) பொன்விழா ஆண்டு கிராமப் புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் ஓர் அங்கமாக, தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 5360 நபர்களுக்கு 'CSC கல்வி நிறுவனம்' மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய இலவச திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கி வருகிறது. நம் கீழக்கரை நகரிலும், அதன் சுற்று வட்டார கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது.
இது குறித்து CSC கல்வி நிறுவனத்தின் இராமநாதபுரம் மண்டல தலைமை நிர்வாகி ராஜா முஹம்மது அவர்கள் கூறும் போது "இந்த சிறப்பான திட்டத்தில், நம் கீழக்கரை சுற்று வட்டார ஏழை மாணவ, மாணவிகள் இணைந்து, வேலை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த திட்டத்தின் கீழ், இலவசமாக மூன்று மாதங்களுக்கு பயிற்சியும் அளித்து, வேலை வாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது.
இந்த பயிற்சியில் கீழக்கரை நகராட்சியிக்கு உட்பட்டவர்கள் தவிர, ஏர்வாடி, காஞ்சிரங்குடி, நத்தம், குலபதம், சிக்கல், செங்கல் நீரோடை, மாயாகுளம், மோர்க்குளம் போன்ற சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 18 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆர்வமுடையவர்கள் இதில் சேர்ந்து பயனடையலாம்." பெண் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.",என்று தெரிவித்தார்.
தற்போது இந்த மூன்று மாத பயிற்சி முடிவடையும் நிலையில், மீண்டும் இந்த பயிற்சி வரும் மே மாதம் இறுதியில் துவங்க இருக்கிறது. ஆகவே இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள, கீழக்கரையின் CSC கல்வி நிறுவனத்தை 04567 - 244996 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளவும்.
No comments:
Post a Comment