கீழக்கரை கிழக்குத் தெருவில் உள்ள பழம்பெரும் பள்ளியான கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியின் 128 வது ஆண்டு விழா இன்று காலை 10 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கிழக்குத் தெரு ஜமாஅத் உபத் தலைவர். முகைதீன் அப்துல் காதர் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
கைராத்துல் ஜலாலியா மேனிலைப்பள்ளியின் தாளாளர். ஜகுபர் சாதிக் காக்கா மற்றும் நகராட்சித் தலைவர் ராவியத்துல் கதரியா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பொருளாளர் மத்தின் காக்கா, செயலாளர் சேகு அபூபக்கர் சாகிபு காக்கா மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் முடிவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment