நம் கீழக்கரை நகரில் ஒவ்வொரு வருடமும், ரமலான் மாதம் 27 வது நோன்பினை நோற்பதற்கு, மீன் கடை தெருவைச் சேர்ந்த ஜனாப். ஹாஜி காக்கா என்கிற கலீல் ரஹ்மான் அவர்களின் தலைமையில் கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கத்தின் (KMSS) சார்பாக பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகளை வழங்குவது வழக்கம்.
அதே போல் இந்த வருடமும் இன்று (15.08.2012) இரவுத் தொழுகைக்குப் பின்னர் 10.30 மணியளவில், மீன் கடைத் தெரு மின் ஹாஜியார் பள்ளியில் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நோன்பு வைப்பதற்கான சஹர் உணவு, இரவுத் தொழுகைக்கு வந்தவர்களுக்கும், பெண்கள் தொழுகை பள்ளிகளுக்கும், சுற்றுப் புறத்திலுள்ள வீடுகளில் நோன்பு வைப்பவர்களுக்கும் வழக்கப்பட்டது.
இது குறித்து KMSS சங்கத்தின் தலைவர். ஜனாப்.ஜமால் அஸ்ரப் அவர்கள் கூறும் போது "பல்லாண்டு காலமாக இந்த சேவையை தொடர்ந்து செய்து வருகிறோம். இந்த வருடம் ஏறத்தாழ 500 க்கும் மேற்ப்பட்ட நோன்பாளிகளுக்கு பிரியாணி உணவு வழங்கப்பட்டது. இந்த பிரியாணியை அக மகிழ்ச்சியுடன் நோன்பு நோற்பவர்கள் பெற்று சென்றனர்.
இது தவிர முப்பது நோன்புகளுக்கும் மீன் கடைத் தெரு மின் ஹாஜியார் பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சியினை எங்கள் சங்கம் சார்பாக சிறப்பாக நடத்தி வருகிறோம். எங்களுடய சங்கத்தின் தலையாய நோக்கமே 'மக்கள் பணி, மறுமையில் பலன் என்பதே'. தொடர்ந்து எங்கள் பொது நலப் பணிகள் தொடர அனைவரும் இறைவனை வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்." என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment