கீழக்கரையில்
தற்போது தமிழக அரசின் காவிரி கூட்டுக் குடிநீர்
திட்டத்தின் மூலம் குடி தண்ணீர், வடக்குத் தெரு மணல்மேடு பகுதியில்
அமைந்து இருக்கும் குடி நீர் தொட்டியில் சேமிக்கப்பட்டு, நகருக்குள்
விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் நகரின் பல இடங்களுக்கு குடி தண்ணீர்
வரவில்லை என்றும், அது மட்டுமின்றி பல இடங்களில் பல்லாண்டுகளுக்கு முன்
பதிக்கப்பட்ட பழைய குடிநீர் இணைப்புக் குழாய்கள் பழுதடைந்து, சாக்கடை
தண்ணீர் கலந்து வருவதாகவும் இதனால் பல்வேறு நோய் தாக்குதலுக்கு
ஆட்படுவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இதனால்
தற்காலிகமாக குடி நீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கீழக்கரை வினியோகம செய்து வந்த பழைய குடி நீர் இணைப்புக் குழாய்கள் அனைத்தையும் மாற்ற நகராட்சி நிர்வாகத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனடிப்படையில் ரூபாய் 1 கோடி செலவில் கீழக்கரை நகர் முழுதும் 5 1/2 கிலோ மீட்டர் தூரம் புதிய குடி நீர் இணைப்புக் குழாய்கள் அமைப்பதற்கு், நகராட்சியின் மூலம் தமிழக அரசின் ஒப்புதல் பெறப்பட்டது. இதன் முதல் கட்டமாக 5.5 மீட்டர் நீளம், 4 இன்ச் சுற்று அகலம் கொண்ட துரு பிடிக்காத, இன்சுலேட் செய்யப்பட்ட 200 குடி நீர் இணைப்புக் குழாய்கள் கீழக்கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது, இதனை பொருத்தும் பணி வடக்குத் தெரு பகுதியில் தற்போது நடைபெற்று வருகிறது.
குழாய்கள் பதிக்க அந்த பகுதியில் 2
அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, பணிகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது.
இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு,
பொதுமக்கள் சற்றே அவதி அடைந்துள்ளனர். இருப்பினும் தாகம் தீர்க்கும்
தண்ணீர் தேவைக்காக, பொறுமையுடன் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுமென நகராட்சி
நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment