இன்றைய பரபரக்கும் வாழ்க்கையில் 'உட்காரவும் நேரமில்லை, உறவாடவும் பொழுதில்லை' என்பது போல காலம் இறக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் ஓய்வு எடுக்க திண்ணை தேடிய மனிதன் மறைந்து போய் இப்போது, திண்ணைகள் எல்லாம் வீடுகளை தேடிக் கொண்டிருக்கிறது, என்று சொன்னால் அது மிகையில்ல.
இன்றைய சந்ததியினருக்கு, திண்ணை என்றால் என்ன ? முற்றம் என்றால் எப்படி இருக்கும் ? என்று பாடம் நடத்த வேண்டிய சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் கடற்கரை நகரம், மிக வேகமான மக்கள் தொகை வளர்ச்சின் பின்னணியில், குறுகிய தெருக்களுக்குள்ளும், அருகிய வீடுகளுக்குள்ளும் தொலைந்து போன பாரம்பரிய கலாச்சார வீடுகளில் ஒன்றிரண்டு மட்டும், இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இன்றைய சந்ததியினருக்கு, திண்ணை என்றால் என்ன ? முற்றம் என்றால் எப்படி இருக்கும் ? என்று பாடம் நடத்த வேண்டிய சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் கடற்கரை நகரம், மிக வேகமான மக்கள் தொகை வளர்ச்சின் பின்னணியில், குறுகிய தெருக்களுக்குள்ளும், அருகிய வீடுகளுக்குள்ளும் தொலைந்து போன பாரம்பரிய கலாச்சார வீடுகளில் ஒன்றிரண்டு மட்டும், இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
கீழக்கரை நகரின் பரதர் தெருவிலும், கிழக்குத் தெரு மற்றும் நடுத் தெருவின் சில பகுதிகளிலும், அழகிய கலை நயத்துடன் கட்டப்பட்டுள்ள திண்ணை மற்றும் பெரிய முற்றத்துடன் கூடிய வீடுகள் இன்றும் காணப்படுகிறது. இந்த வீடுகளின் வெளிப் பகுதிகளிலும், உட்பகுதியிலும் காணப்படும் வேலைப்பாடுகள் மிகுந்த பர்மா தேக்கு மரத்தினாலான தூண்கள் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது. மூன்று நூற்றாண்டுகளை தாண்டி கம்பீரமாக நிற்கும் இந்த வீடுகள் தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.
மரபுவழிக் கட்டிடங்களில் காணப்படும் இந்த திண்ணைகள் பல்வேறு சமூக பண்பாட்டுச் செயற்பாடுகளைத் தம்முள் அடக்கியுள்ளன. கீழக்கரை பகுதிகளில் காணப்பட்ட அந்த காலத்து வீடுகளில், தனிப்பட்ட பயன்பாட்டுக்கான உட்பகுதி, பொதுப் பயன்பாட்டுக்கான வெளிப்பகுதி திண்ணைகள் என்ற அமைப்பிலேயே பெரும்பாலும் அமைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.
திண்ணைகள் பயன்பாட்டிலிருந்த இடங்களில், குடும்பத்துடன் அதிகம் நெருக்கமில்லாத வெளியாரை உபசரித்தல், தொழில் ரீதியான வெளியார் தொடர்புகள் போன்றவற்றுக்கு இவை பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. சில வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள், தொழில் செய்யும் இடமாகவும் இவை பயன்பட்டு இருக்கிறது. முற்காலத்தில் சிறுவர்களுக்குக் கல்வி புகட்டும் இடமாகவும் இவை பயன்பட்டதுண்டு. திண்ணைப் பள்ளிக்கூடம், திண்ணைத் தோழர்கள், திண்ணைப் பேச்சு, திண்ணைத் தூங்கி போன்ற சொற்றொடர்களிலிருந்து திண்ணை பயன்பட்ட முறை பற்றி நம்மால் அறிய முடிகின்றது.
பழங்காலத்தில் கீழக்கரை நகருக்கு கடல் வணிகமாக வரும் தூரப் பயணத்தில் ஈடுபட்டுள்ள வணிகர்களும், வழிப் போக்கர்களும் தங்கிச் செல்வதற்கு உரிய இடமாகவும் இவை பயன்பட்டிருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் திண்ணைகளின் பயன்பாடுகள் குறித்த சான்றுகளைப் பரவலாகக் காணமுடியும். நம் கீழக்கரையில் இது போன்ற பழங்கால வீடுகளை கண்ணுறும், இன்றைய பொறியியல் பயிலும் இளவல்கள் அதிசயித்தே போகின்றனர்.
இது குறித்து கருப்பட்டிக்காரத் தெருவை சேர்ந்த ஜனாப்.A.M.தீன் சாலிஹ் (வயது 87) அவர்கள் கூறும் போது "அந்தக் காலத்து வீடுகள் இன்றும் என் நினைவில் நீங்காது இடம் பெற்று இருக்கின்றன. தெருவுக்கு இரு புறமும் வீடுகள் ஒரு ஒழுங்காகக் கட்டமைக்கப் பட்டிருக்கும். நடுவாக்குக்கு இரு புறமும் மயிர்க் கற்றைகள் படிந்துள்ளது போன்று, பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். நம் கீழக்கரை நகரில் பெரும்பாலும் ஓடு மற்றும் கூரை வேய்ந்த வீடுகள் பரவலாக நிறைந்திருந்தது.
வஜ்ஜிரக்கட்டு என்று சொல்லப்படும் காளவாய்க் (சுண்ணாம்பு) கலவையில் தான் வீடுகள் கட்டப்பட்டிருக்கும். நான் சிறு வயதாயிருக்கும் போது, கீழக்கரை மேலத் தெருவில் 'காளவாய் மரைக்கா' என்றே ஒருவர் வாழ்ந்தார். திண்ணை, முற்றம் இல்லாத வீடுகளை பார்க்க முடியாது. முன் திண்ணையைத் தாங்கிக் கொண்டு நிற்கும் தேக்கு மரத் தூண்கள் மிகவும் கவர்ச்சியாக இருக்கும்.
சிலர் வீட்டுத் திண்ணைகள் மிகப் பெரியவையாக இருக்கும். ஒவ்வொரு திண்ணையிலும் பத்துப் பேர்கள் கூட தூங்கலாம். இப்போது கால ஓட்டத்தில் எல்லாம் மறைந்து விட்டது. ஒரு சில வீடுகள் மட்டும் இடிக்கப்படாமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது." என்று தன் நினைவலைகளை சொல்லி காட்டி பழங்காலத்து கீழை நகருக்கே பிரயாணிக்க வைத்தார்.
தற்போது கீழக்கரை மேலத் தெரு பகுதியில் கட்டப்படும் சில வீடுகளில், பெரிய பரப்பளவுடன் பழங்கால பாரம்பரியங்களை நினைவு கொள்ள தக்க வகையில், திண்ணை, முற்றம், தூண்கள் என்று கலை நயத்துடன், மனதை கொள்ளை கொள்கிறது.
Comments :
அந்த காலத்தில் வழிப்போக்கர்கள் ஓய்வு எடுக்கவும், மாலை வேளைகளில் வீட்டு சொந்தக்காரர்கள் தங்கள் உறவினர்களுடன் அமர்ந்து உரையாடவும் திண்னைகள் கட்டப்பட்டன.
நம் ஊரில் எல்லா தெருக்களிலும் திண்னண வீடுகள் இருந்தன. அதில் இளைஞர்கள் செட் செட்டாக இருந்
நம் ஊரில் எல்லா தெருக்களிலும் திண்னண வீடுகள் இருந்தன. அதில் இளைஞர்கள் செட் செட்டாக இருந்
து கதை பேசி மகிழ்வார்கள். அது காலப்போக்கில் 5 கோல் வீடாக, 4 கோல் வீடாக மாறி போகும் காலம் கட்டம் வந்து விட்ட காரணத்தால் அவைகள் முற்றிலும் அழிந்து விட்டன.
இந்த பிள்ளைகளுக்கு விளையாட்டு என்பது கேள்வி குறியாகி எந்த நேரமும் டிவி, கம்பியுட்டர் என முடங்கி விட்ட காரணத்தாலும், ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சம் 2 பிள்ளைகள் என குறுகி விட்டக்காரணத்தாலும் விளையாட்டுகள் குறைந்து, திண்னைகளில் தோழர்களுடன் அலவளாவும் நிலைகளும் முற்றிலும் இல்லாமல் போய் விட்டன.
நான் சிறுவனாக இருந்த காலத்தில் கட்டப்பட்ட என் தாய் வீடு இப்போதும் நீண்ட திண்னையை கொண்டுள்ளது.
ஆனால் என் மனைவிக்கு கட்டிய வீடு திண்னை இல்லாமல்தான் இப்போது கட்டப்பட்டுள்ளது.
-கீழை ஜமீல் முஹம்மது.
---------------------------------------
இந்த பிள்ளைகளுக்கு விளையாட்டு என்பது கேள்வி குறியாகி எந்த நேரமும் டிவி, கம்பியுட்டர் என முடங்கி விட்ட காரணத்தாலும், ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சம் 2 பிள்ளைகள் என குறுகி விட்டக்காரணத்தாலும் விளையாட்டுகள் குறைந்து, திண்னைகளில் தோழர்களுடன் அலவளாவும் நிலைகளும் முற்றிலும் இல்லாமல் போய் விட்டன.
நான் சிறுவனாக இருந்த காலத்தில் கட்டப்பட்ட என் தாய் வீடு இப்போதும் நீண்ட திண்னையை கொண்டுள்ளது.
ஆனால் என் மனைவிக்கு கட்டிய வீடு திண்னை இல்லாமல்தான் இப்போது கட்டப்பட்டுள்ளது.
-கீழை ஜமீல் முஹம்மது.
---------------------------------------
Syed Abusalique Seeni Asana அபு சாலிஹ் (வரலாற்று ஆய்வாளர் )
ithil kappalil ubayoham seitha siru kannadi jannal meal pohum padi kattu aruhil ullathu.. 2nd floor pohum pathai miha kuruhiyathaha erukkum.. thanks Keelai ilayyavan enga veetu alahu enakea photola parthu tha theriyuthu..
இன்றைய இளைய தலைமுறையினர் அறிய வேண்டிய சிறப்பானச் செய்தி/கட்டுரை. இன்றைய இளைய த்லைமுறையை சார்ந்த வரலாற்று ஆய்வாளர் தம்பி அபு சாலிஹ் பின் சீனி அசனாவே தன்னின் இந்த வீட்டை ரசிக்கிறார் என்றால் எதுவுமே வெளிச்சத்திற்கு வந்தால் தான் சிறக்கும். அந்த வகையில் இந்த பெருமை முழுக்க கீழை இளையவனையே சாரும்.
ReplyDeleteAnai varin nenaivugalaum poratti podum oru mega serantha katturrai iethu kaka All the best.....
ReplyDeletenice one
ReplyDeletenice one bt true
ReplyDelete