கீழக்கரை - இராமநாதபுரம் நெடுஞ்சாலை வழியாக, இன்று இரவு சுமார் 7.15 மணியளவில் கேரளாவில் இருந்து, 15 க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகளுடன் பயணித்து வந்த மினி சொகுசு பேருந்து, வண்ணாந்துறை மின்சார வாரியம் அருகே, 'நெடுஞ்சாலை டாஸ்மாக்' மதுபானக் கடையின் வாசல் நெருக்கத்தில் வரும் போது, கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதில் பயணித்த இருவர் படு காயங்களுடன், இராமநாதபுரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து சம்பவ இடத்தில், இருந்த விபத்துக்குள்ளான பயணிகளிடம் விசாரித்த போது " எங்கள் வாகனத்தை, மிக மிதமான வேகத்தில் தான் ஓட்டுனர் ஒட்டி வந்தார். (மின்சார வாரியம் அருகே, நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடையை சுட்டிக் காட்டி) இந்த சாராயக் கடையில் இருந்து போதையில் தடுமாறி வந்த, ஒரு மூத்த வயதை மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத நபரால தான், இந்த விபத்து ஏற்பட்டது.
அந்த குடிமகன் மீது மோதாமல் இருப்பதற்காகத் தான், ஓட்டுனர் வண்டியை வேகமாக திருப்பியதில் இந்த கோர சம்பவம் நடை பெற்று விட்டது. எங்களுடன் பயணித்த அத்தனை பேருக்கும் ஆங்காங்கே பலமான மற்றும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது." என்று மலையாளத்தில் கண்ணீருடன் தெரிவித்தார்.
தற்போது அடிபட்ட நபர்களின் நிலைமை என்ன என்பது குறித்த விபரம் இன்னும் தெரியவில்லை. இந்த விபத்தினால் கீழக்கரை - இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து பற்றிய தகவல் கிடைத்தவுடன், கீழக்கரை காவல் துறையினர் விரைந்து வந்து, தங்கள் கடமைகளை செய்தனர். மேலும் கீழக்கரை பொதுமக்களும் திரண்டு வந்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் உதவிகளும் செய்தனர்.
இது குறித்து நாம் சென்ற வாரம் வெளியிட்டிருந்த செய்தி
இது குறித்து கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளையின் செயலாளர். S.இஸ்மாயில் அவர்கள் கூறும் போது "இந்த மோசமான வளைவு உள்ள இடத்தில் 'வாரத்திற்கு ஒரு விபத்து' என, சிறிய, பெரிய அளவில் நடந்து கொண்டே இருக்கிறது. இந்த நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடை, இந்த பகுதியில் நடைபெறும் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதனை உடனே அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு மது அருந்துபவர்களால், தொடர்ந்து பேராபத்துக்கள் நிகழ்ந்து வருவது தவிர்க்க முடியாததாகி விட்டது." என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
இது குறித்து நாம் சென்ற வாரம் வெளியிட்டிருந்த செய்தி
கீழக்கரையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் 'டாஸ்மாக்' மது பானக்கடை - விரைவில் அகற்றப்பட பொதுமக்கள் கோரிக்கை!
http://keelaiilayyavan.blogspot.in/2013/04/blog-post_21.html
(முந்தைய செய்தியை படிக்க இங்கே 'கிளிக்'கவும்.)
(முந்தைய செய்தியை படிக்க இங்கே 'கிளிக்'கவும்.)
விபத்து நடந்த நேரம் கூட, கடையை திறந்து, கல்லா கட்டிக் கொண்டிருக்கும் , 'கண் கொள்ளாக் காட்சி' ! |
இது குறித்து கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளையின் செயலாளர். S.இஸ்மாயில் அவர்கள் கூறும் போது "இந்த மோசமான வளைவு உள்ள இடத்தில் 'வாரத்திற்கு ஒரு விபத்து' என, சிறிய, பெரிய அளவில் நடந்து கொண்டே இருக்கிறது. இந்த நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடை, இந்த பகுதியில் நடைபெறும் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதனை உடனே அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு மது அருந்துபவர்களால், தொடர்ந்து பேராபத்துக்கள் நிகழ்ந்து வருவது தவிர்க்க முடியாததாகி விட்டது." என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
- Keelai Ilayyavan தற்போது வெளியாகிருக்கும் தகவலின் படி, தேசிய மற்றும் மாநில நெடுச்சாலைகளில் இருக்கும் டாஸ்மாக் மது பானக் கடைகளை, மூடுவது குறித்து ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு, தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற உச்ச நீதி மன்ற
உத்தரவை ஏற்று, கடையை அகற்ற "இன்னும் எங்களுக்கு ஐந்து மாத கால அவகாசம் வேண்டும்" என மனு செய்திருப்பதன் மூலம் தமிழக அரசு, பொது மக்களுக்கு என்ன சேதியை சொல்ல வருகிறது என்று தெரியவில்லை.
இருப்பினும் உச்ச நீதி மன்ற நீதிவான்கள், இந்த மனுவை ஏற்று கொள்வார்களா ? அல்லது தள்ளுபடி செய்வார்களா ?? என்பதை அடுத்த வாரம் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதற்குள்ளாக அனு தினமும், குடிமகன்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் எத்தனை பேர் மாண்டு போவார்களோ என்ற அச்சம் மட்டும் பொதுமக்கள மத்தியில் நிலை கொண்டு இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
நேற்று மதியம் கீழக்கரையில் இருந்து நான் திரும்புகையில் ஒரு டவுசர் போட்ட குடிகார நாய் ஆட்டோவின் குருக்கே பாய்ந்துவிட்டது ஆட்டூ டிரைவர் சற்று நேரம் தடுமாறி விட்டார் ஆனால் விபத்து நடக்க வில்லை. கீழே இறங்கி அந்த டவுசர் போட்ட நாய்க்கு ரென்டு இழுப்பு இழுத்துட்டுத்தான் வந்தேன்!!
ReplyDelete