புகைப்படம் எடுப்பது என்பது ஒரு கலை. தொழில் நுட்பங்களை சரியாக கையாண்டால் மட்டுமே சிறந்த புகைப்படங்களை பெற முடியும். அது எல்லோருக்கும் சுலபமாக வந்துவிடாது. 20ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலக வரலாற்றை மாற்றியுள்ளன என்பதை நாம் மறுக்க முடியாது. உதாரணமாக, சீன வீரர்களின் ராணுவ பீரங்கியை எதிர்த்து நின்ற டேங்க் மேன், வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த சிறுமியின் புகைப்படம், 1994ம் ஆண்டு, சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த குழந்தையின் போட்டோ ஆகியவற்றை சொல்லலாம். உலகெங்கும் வாழும் புகைப் படக் கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக, ஒவ்வொரு ஆண்டும் உலக புகைப்பட தினமாக ஆகஸ்ட் 19ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்போது கீழக்கரை நண்பர்கள் பலர் ஒன்றிணைந்து தற்போதைய நம் கீழக்கரை நகரின் எழில் கொஞ்சும் கடற்கரையையும், அழகிய பள்ளிவாசல்களின் தோற்றங்களையும் விதவிதமாக, புதுப்புது கோணங்களில் புகைப்படம் எடுத்து தங்களின் முகப் புத்தகத்தில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் காண்பதற்கரிய புகைப்படங்களையும் சேகரித்து நண்பர்களுடன் பகிர்ந்து அசத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுள் HAM 7 STUDIO என்கிற பக்கத்தை தன் நண்பர்கள் அப்துல் கரீம், லாஹீர், ரிதுவான், பாசித், அஃப்ரார், ஃபைசல், ஷகீப், அஹ்சன், அல் ஃபராஸ், ஆகில் உள்ளிட்ட நண்பர்களுடன் இணைந்து துவங்கி இருக்கும் கீழக்கரை நடுத் தெருவைச் சேர்ந்த சகோதரர் 'ஜலாலுதீன்' அவர்களும், A.S.TRADERS என்கிற பெயரில் முகப் புத்தகத்தில் இருக்கும் கீழக்கரை கோக்கா அஹமது தெருவைச் சேர்ந்த சகோதரர் 'கஃபார் கான்' அவர்களும் தங்களின் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
கீழக்கரை நகரின் குப்பைகளையும், சாக்கடைகளையும், முகப் புத்தகத்தில் புகைப் படங்களாக பார்த்து, பார்த்து சலித்துப் போன கண்களுக்கு, இதமூட்டும் வகையில் கீழக்கரையின் அழகியலையும், அற்புதமான பக்கங்களையும் வெளிக்கொணரும் சமூக ஆர்வலர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

A.S.TRADERS கஃபார் கான் அவர்கள் |
A.S.TRADERS கஃபார் கான் அவர்கள் தன் முகப் புத்தகத்தில் பகிர்ந்து இருக்கும் கீழக்கரை நகரின் அழகு மிளிரும் புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு :
HAM 7 STUDIO ஜலாலுதீன் அவர்கள் தன் முகப் புத்தக பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் கீழக்கரை நகரின் பொலிவு நிறைந்த.. பார்ப்போர் மனதை கொள்ளை கொள்ளும் புகைப்படங்கள்... சில உங்கள் பார்வைக்கு :
HAM 7 STUDIO ஜலாலுதீன் அவர்கள்
|
HAM 7 STUDIO ஜலாலுதீன் அவர்களின் முகப் புத்தக பக்கத்தை 'LIKE' செய்து பார்வையிட கீழ் காணும் லிங்கை சொடுக்கவும்.
கீழை மாநகரின் அழகு மிகும் அற்புதமான பல இடங்களை, கை தேர்ந்த புகைப்பட கலைஞர்களையும் விடவும், மிக நுணுக்கமாக புகைப் படம் எடுத்து, நம் கண் முன்னே கொண்டு வந்து சேர்த்து கொண்டிருக்கும் அன்பு சகோதரர் கஃபார் கான் அவர்களுக்கும் ஜலாலுதீன் அவர்களுக்கும் கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
- Keelai Ilayyavan கீழக்கரை நகரின் குப்பைகளையும், சாக்கடைகளையும், முகப்புத்தகத்தில் புகைப்படங்களாக பார்த்து, பார்த்து சலித்துப் போன கண்களுக்கு, இதமூட்டும் வகையில் கீழக்கரையில் அழகியலையும், அற்புதமான பக்கங்களையும் வெளிக்கொணரும் சமூக ஆர்வலர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.
vry nice photography...,well done HAM 7 STUDIO, Friends n vry Spl.Tnx to "Keelai Ilayyavan" First photo in this ,is my son "MUSTAFA KAMAL"
ReplyDeleteAlhamudulillah.. kaka, its such a special compliment from ur side..
ReplyDeletei thank u so much for that...
It has been such a wonderful encouragement for me..
and i also thank all my brothers who have liked & commented on my photos...
i would like this encouragement to continue...insha allah...
Alhamudulillah.. kaka, its such a special compliment from ur side..