கீழக்கரை நகரில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் சேவை அறக்கட்டளை சார்பாக கல்விக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கீழக்கரை பகுதியில் ஆரம்பக் கல்வியைக் கூட துவங்க முடியாமல் தவிக்கும், அனைத்து சமுதாய ஏழை எளிய பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகவும், உயர் நிலை மற்றும் கல்லூரிப் படிப்பிற்கான கல்வி உதவிகளையும், இந்த அறக்கட்டளையினர் தொய்வின்றி தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வருடத்திற்கான கல்வி உதவிகள் வழங்கும் விழா எதிர் வரும் (05.06.2013) புதன் கிழமையன்று மாலை 4.30 மணியளவில், மேலத் தெரு புதுப் பள்ளிவாசல் அருகில் உள்ள முஸ்தபா மரைக்காயர் தோட்டத்தில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக, இராமநாதபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.காத்தலிங்கன் அவர்கள் கலந்து கொள்கிறார்.
இது குறித்து மக்கள் சேவை அறக்கட்டளையின் நிறுவனர் M.K.E உமர் அவர்கள் கூறும் போது "எல்லாப் புகழும் இறைவனுக்கே.. இறைவன் அருளால் கீழக்கரையில் கல்வி, மருத்துவம், ஏழை எளியோர்களின் கடன்களை செலுத்த உதவி புரிதல், தையல் மிஷின் போன்ற தொழில் கருவிகளை வழங்குதல், நோன்பு காலங்களில் ஜகாத்து, அரிசி உடை வழங்குதல், ஏழை மக்களுக்கு கழிவறைகள் எடுத்து தருதல், கிணறுகள் வெட்டித் தருதல், ஏழை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி, சீருடை, புத்தகம், கல்லூரிக் கட்டணம் போன்றவைகளை வழங்குதல் போன்ற சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.
இறைவன் நாடினால் இந்த வருடமும், 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவிகளை வழங்கக் காத்திருக்கிறோம். ஜனவரி முதல் டிசம்பர் வரை எங்கள் சேவைகள் இடைவிடாது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த கல்வியாண்டுக்கான கல்வி உதவிகள் தேவைப்படுவோர் ஏப்ரல் மாத துவக்கத்திலேயே அதற்கான உதவித் தொகை அட்டையை எங்களிடம் பெற்று விண்ணப்பிக்கலாம். இது தவிர கீழக்கரையில் உள்ள விதவைகள் மற்றும் முதியோர்களுக்கான உதவித் தொகை மாதம் தோறும் 250 க்கும் மேற்பட்டோர்களுக்கு வழங்கப் பட்டு வருகிறது" என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அறக்கட்டளை நிர்வாகிகள் |
கீழக்கரை நகரில் ஆண்டு முழுவதும் சிறப்பாக செயலாற்றி வரும் இந்த மக்கள் சேவை அறக்கட்டளையினரின் பணிகள் மென் மேலும் சிறக்க கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கல்வி, மருத்துவம், தொழில் உதவி போன்றவைகள் பெறுவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைப் பேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி :
98400 51577 / Email : omerwest@hotmail.com
FACE BOOK COMMENTS :
- Riffan Zyed, சின்னக்கடை நண்பர்கள், Ahamed Kadarand 8 others like this.
- கீழக்கரை 'புதிய ஒற்றுமை' நம் கீழக்கரையில் கல்வி உதவிகள் கிடைக்காமல் ஏராளமான ஆர்வமுள்ள மாணவ செல்வங்கள் படிப்பை பாதியிலேயே விட்டு விடுகின்றனர். அது போன்ற ஏழை மாணவ, மாணவியர்களை இனம் கண்டு, இடைவிடாது சேவையாற்றும் தம்பி உமர் அவர்களுக்கும் அவர் சார்ந்த அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவருக்கும் எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்வின் கிருபை குறைவில்லாமல் கிடைக்க துவா செய்கிறேன். ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
- Riffan Zyed i THINK THIS EDUCATIONAL HELPS R ONLY FOR KEELAKARAI STUDENTS. I REQUEST THE TRUST MEMBERS WOULD EXTEND THIS HELPS TO KILAKAKARAI SURROUNDING RURAL PEOPLE ALSO. THANKS
No comments:
Post a Comment