இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், கீழக்கரையில் அறவே மழை பெய்யாததால் 'கடும் வறட்சியான சூழ்நிலை' நிலவுகிறது. பெரும்பாலான வீடுகளில் உள்ள கிணறுகள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. குளிக்கவும், துணி துவைக்கவும் கூட தண்ணீர் இல்லாத நிலையே பல இடங்களில் உள்ளது. இன்னும் பல வீடுகளில் பல ஆயிரங்கள் செலவழித்து கிணற்றை ஆழப்படுத்தியும் நீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் கீழக்கரையில் உள்ள அனைத்து ஜமாஅத்தார்களும் ஒன்றிணைந்து, திறந்த வெளியில் 'மழை தொழுகை' நடத்த முன் வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் இன்று (20.09.2013) வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகைக்குப் பின்னர், கீழக்கரையில் மழை பெய்ய வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடை பெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, மழை பொழிவை எதிர் நோக்கி, இறைவனை இறைஞ்சினர்.
FACE BOOK COMMENTS :
- கீழக்கரை 'புதிய ஒற்றுமை' கீழக்கரையில் அனைத்து முஹல்லா மக்களும் ஒற்றுமையாக சேர்ந்து, நபியவர்கள் காட்டி தந்த வழியில் ஒரு மழை தொழுகையை ஏற்பாடு செய்வார்கள் என்று எதிர் பார்த்தால் இன்னும் நடக்கவில்லையே. யா அல்லாஹ். எங்கள் பாவங்கள் குற்றங்கள் அனைத்தையும் பிழை பொறுத்து மன்னித்து மழையை தந்தருள் நாயனே. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு வாழ்க, வளர்க, ஓங்குக
ReplyDelete