தேடல் தொடங்கியதே..

Monday, 11 November 2013

கீழக்கரை நகராட்சி சேர்மனுடன் தெற்குதெரு முஸ்லிம் பொதுநல சங்கத்தினர் சந்திப்பு - 18 வது வார்டு பகுதியில் வாருகால்களை விரைந்து சீரமைக்க வேண்டுகோள் !

கீழக்கரை தெற்குதெரு முஸ்லிம் பொதுநல சங்கம் சார்பில் 18 வது வார்டு பகுதியில் சின்னக்கடை தெருவில் இருந்து தெற்குதெரு வழியாக பேட்டைதெரு ( யூசுப் சுலைஹா கிளினிக் ) வரை உள்ள கழிவுநீர் கால்வாய்களுக்கு ஒரு அடி தூர்வாரி கால்வாய் மூடி போட வேண்டும் என கீழக்கரை நகராட்சி தலைவரிடம் நேரில் கோரிக்கை விடுத்தனர். இந்த சந்திப்பின் போது சங்கத்தின் தலைவர் நியாஸ் அவர்கள் தலைமையில் சங்கத்து உறுப்பினர்கள் 18 வது வார்டு கால்வாய் மூடி விசயமாக நகராட்சி அலுவலத்திற்கு நேரில் சென்று சேர்மன் அவர்களிடம் மனு கொடுத்தனர்.





இது குறித்து பதிலளித்த நகராட்சி சேர்மன் ராவியத்துல் கதரியா ரிஸ்வான் அவர்கள் இந்த விசயமாக போர்கால அடிப்படையில் குறுகிய காலத்தில் கால்வாய் மூடி போட்டுத் தருகிறேன் என்று உறுதி அளித்துள்ளார். இதற்கு சங்கத்து சார்பில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் சேர்மன் அவர்களுக்கு நன்றி கூறினர்.

கீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு !

கீழக்கரை ஓடைக்கரைப் பள்ளி ஜமாத்தை சேர்ந்த கருப்பட்டிக்காரத் தெரு மர்ஹூம். ஜெய்னுலாபுதீன் அவர்களின் மகளும், சின்னக்கடைத் தெரு பாசித் ஸ்டோர் சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹூம் சிந்துபாத் சீனி, மர்ஹூம் பசீர், ஆனா என்கிற நெய்னா, சிந்துபாத் சூப்பர் மார்க்கெட் ஹபீப் ஆகியோர்களின் சகோதரியும், சுல்தான் இபுறாகீம், பைசுல் ரஹ்மான், தாரிக், இம்ரான்,பாசித் ஆகியோர்களின் தாயாருமாகிய 'தாதா லாத்தா' என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் 'தாதா ஹயாத்து பீவி' அவர்கள் இன்று மாலை சுமார் 5 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.




(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்)

அன்னாரின்  ஜனாஸா நல்லடக்கம் ஓடக்கரை பள்ளி மைய வாடியில் நாளை நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லடக்கம் செய்யும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு : 

ஜனாப். ஹபீப் முஹம்மது   -  9629550261

கீழக்கரை பேர்ல் மாண்டிசோரி பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா நிகழ்ச்சிகள் !

"எதிர்கால உலகை ஆளப்போகிறவர்கள் இவர்களே..." என்று அடிக்கடி பெரியவர்களால் சுட்டப்படும் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் தினம் 'குழந்தைகள் தினம்'. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதியும், பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 



இந்நிலையில் கீழக்கரை பேர்ல் மாண்டிசோரி பள்ளியில் குழந்தைகள் தின விழா போட்டிகள் BLUE DAY & KITE FESTIVAL என்கிற பெயரில் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி வெள்ளிக் கிழமையன்று நடை பெற்றது. அதில் கலந்து கொண்ட மாணவ மணிகள் அனைவரும், ஒற்றுமையை வெளிக் கொணரும் விதமாக, நீல வண்ணத்தில் உடையணிந்து கொண்டு பட்டம் பறக்க விடுதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். 




மேலும் கீழக்கரை பேர்ல் மாண்டிசோரி பள்ளியின் சார்பாக கடந்த நவம்பர் 8 ஆம் தேதி, ஓவியம் தீட்டுதல், பெயிண்டிங், கட்டிடக் கலை (ICE STICK MAKING, COLLAGE WORK, FLOWERS ARRANGEMENT, BUILDING BLOCKS, BOAT MAKING) உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மணிகளுக்கும், ஆர்வமுடன் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. 

Sunday, 10 November 2013

கீழக்கரையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ) சார்பாக இன்று (10.11.2013) நடை பெற்ற இரத்த தான முகாம் !

கீழக்கரையில் நவம்பர் 10 ஆம் தேதி பயங்கராவாத எதிர்ப்பு நாளை முன்னிட்டு இந்திய தவ்ஹித் ஜமாஅத் சார்பாக கீழக்கரை அரசு மருத்துவமனையினருடன் இணைந்து நடத்திய இரத்த தான முகாம் இன்று (10.11.2013) (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணி முதல் 12.30 மணி வரை கீழக்கரை அரசு மருத்துவமனையில் நடை பெற்றது. இந்த முகாமினை இராமநாதபுரம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஹசன் அலி அவர்கள் துவங்கி வைத்தார். இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று இரத்தக் கொடை வழங்கினர். 





மேலும் இந்த முகாமில் தொற்றில்லா நோய்களை கண்டறியும் இலவச முகாமும் நடை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொறுப்பாளர் பிர்தவுஸ், மாவட்ட பொருளாளர் ஹாஜா அனீஸ், கீழக்கரை INTJ நகர் தலைவர் ஹாஜா முகைதீன், நிரோஸ் கான், பொருளாளர் நியாஸ், மூர் டிராவல்ஸ் அசனுதீன் ஆகியோர்  உடனிருந்தனர்