கீழக்கரையில் நவம்பர் 10 ஆம் தேதி பயங்கராவாத எதிர்ப்பு நாளை முன்னிட்டு இந்திய தவ்ஹித் ஜமாஅத் சார்பாக கீழக்கரை அரசு மருத்துவமனையினருடன் இணைந்து நடத்திய இரத்த தான முகாம் இன்று (10.11.2013) (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணி முதல் 12.30 மணி வரை கீழக்கரை அரசு மருத்துவமனையில் நடை பெற்றது. இந்த முகாமினை இராமநாதபுரம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஹசன் அலி அவர்கள் துவங்கி வைத்தார். இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று இரத்தக் கொடை வழங்கினர்.
மேலும் இந்த முகாமில் தொற்றில்லா நோய்களை கண்டறியும் இலவச முகாமும் நடை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொறுப்பாளர் பிர்தவுஸ், மாவட்ட பொருளாளர் ஹாஜா அனீஸ், கீழக்கரை INTJ நகர் தலைவர் ஹாஜா முகைதீன், நிரோஸ் கான், பொருளாளர் நியாஸ், மூர் டிராவல்ஸ் அசனுதீன் ஆகியோர் உடனிருந்தனர்
இது நம்ம ஊர் கீழக்கரை அரசு மருத்துவமனையா? நம்ப முடியவில்லையே!!! அரசு நிர்வாகம் என்றால் பொது மக்களின் ஏகோபித்த கருத்தை தவிடு பொடியாக்கும் விதமாக நிர்வகிக்கும் நிர்வாகத்திற்கு மனம் நிறைந்த பாராட்டுகள் உரித்தாகுக.
ReplyDelete