கீழக்கரை துணை மின் நிலையத்தில் நாளை (01.03.2012) வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழக்கரை, ஏர்வாடி, முகம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம், உத்திரகோசமங்கை, களரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், காலை 9 மணி முதல் 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய உதவி செயற் பொறியாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கீழக்கரையில் ஏற்கனவே 10 மணி நேர அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின் வெட்டு அமுலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment