நம் கீழக்கரை நகரில் குற்ற செயல்களைத் தடுக்கும் முயற்சியாகவும், பொது மக்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்துவதற்காகவும், கீழக்கரை காவல் நிலையம் சார்பாக, துண்டுப் பிரசுரம் (நோட்டீஸ்) விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இன்ஸ்பெக்டர் இளங்கோவன் அவர்கள் (படம் : கீழக்கரை டைம்ஸ்) |
இந்த துண்டுப் பிரசுரத்தில், பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பல அத்தியாவசிய நடை முறைகள் தெளிவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த பொதுமக்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நாளை (05.03.2012) திங்கட்கிழமை அன்று கீழக்கரை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கண்ணாடி வாப்பா மஹாலில் நடை பெற உள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
கீழக்கரை காவல் நிலையம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸ் |
ஆகவே கீழக்கரை பொது மக்கள் அனைவரும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொண்டு, காவல் துறையினர் எடுக்கும் நல்ல முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்குமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment