கிழக்கரையில் இன்று (19.02.2012) காலை 11 மணியளவில் கீழக்கரை முக்கு ரோட்டில், நகராட்சி சார்பாக பாலித்தீன் உபயோகிப்பதால் ஏற்படும் தீவினைகளை களைவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் எற்படுத்துவதற்க்காக பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நகராட்சித் தலைவர் அவர்களும், நகராட்சித் துணைத் தலைவர் அவர்களும் முன்னிலை வகித்து துவங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு எக்ஸ்னோரா அமைப்பினரும் சிறப்பான வழிகாட்டுதல்களை வழங்கினர்.
பெரும்பாலான நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு, அனைத்து கடைகளுக்கும் ஊர்வலமாக சென்று, பிளாஸ்டிக் பைகள் விற்பதை கைவிட்டு, நகராட்சிக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இதில் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணி திட்டத்தின் மாணவர் அணியினரும், மகளிர் அணியினரும் பங்கு கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த பேரணி நிகழ்ச்சியில், நகராட்சித் தலைவர் ராபியத்துல் கதரியா அவர்களும், துணைத் தலைவர் ஹாஜா முகைதீன் காக்கா அவர்களும் அனைத்து மாணவ மாணவிகளுடன் இணைந்து, எல்லா மக்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக, சாலையோரங்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றி, நகராட்சி வண்டிகளில் கொட்டினர். இவர்கள் அனைவரும் வீதிகளில் உலா வந்த அனைத்து மக்களிடமும், வெகு சிறப்பாக விழிப்புணர்வு செய்தது, பார்ப்பவர்கள் அனைவரிடமும் 'இனி பாலித்தீன் உபயோகிக்கக் கூடாது' என்ற உறுதி மொழியினை எடுக்க செய்தது.
இறைவன் நாடினால், ஒன்றுபடுவோம்.. வெற்றி பெறுவோம் !
No comments:
Post a Comment