கீழக்கரை ஜின்னா தெருவைச் சேர்ந்த கருத்த மரைக்காயர் அவர்களின் மனைவி மரியம் பீவி (வயது (55) அவர்களது மகள் துல்பிகாவுடன் கீழக்கரையிலிருந்து இராமநாதபுரம் மருத்துவமனைக்கு செல்வதற்காக அரசு பேருந்து 1B யில் பயணித்தனர். அப்போது இவர்களை சம்பந்தம் இல்லாமல் ஆபாசமாக திட்டி தகராறு செய்த பஸ் கண்டக்டர் மீது இவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சப் இன்ஸ்பெக்டர் கார்மேகம் ஆகியோர்களின் துரித நடவடிக்கையால் பஸ் கண்டக்டர் ஜெயகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மரியம் பீவி அவர்களிடம் கேட்ட போது " பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்ததால் டிக்கெட் எடுக்க கொஞ்சம் தாமதமாகி விட்டது. கண்டக்டர் ஜெயகாந்தனிடம்(37) டிக்கெட் கேட்டபோது சில்லரை இல்லை என எரிச்சலடைந்து வாய்க்கு வந்தபடி மிக மோசமாக ஆபாசமான வார்த்தைகளில் பேசினார் .உடனடியாக எங்கள் குடும்பாத்தாரிடம் மொபைல் மூலம் தகவல் கொடுத்தோம்.
அப்போது கண்டக்டர் ஜெயகாந்தன் "எங்கே வேண்டுமானலும் புகார் செய்து கொள்"' என்று திமிராக, உறவுமுறைகளை கொச்சைப் படுத்தி பதில் சொன்னார். பின்னர் அதே பஸ்ஸில் திரும்ப பயணித்து ஆபாசமாக பேசிய கண்டக்டர் ஜெயகாந்தனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தோம். நாங்கள் கொடுத்த புகாரின் பேரில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இது போன்று நமதூரை சார்ந்த எந்த ஒரு பெண்மணிக்கும் இனி நடக்கக் கூடாது" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
நன்றி : தினத்தந்தி நாளிதழ் |
நம் கீழக்கரை மக்கள், அனைத்து பிரச்சனைகளையும், சட்டத்தின் வழி நின்று எதிர் கொள்ள முனைந்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. இனி சட்டம் தன் கடமையை செய்யட்டும்....
No comments:
Post a Comment