நம் கீழக்கரை நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் + 2 தேர்வுகளை எழுதி முடிவுகளுக்காக காத்திருந்த 1000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் எதிர் கால பாதையை தீர்மானிக்கும் விதமாக இன்று காலை 11 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இது வரை பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், முஹைதீனியா மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி மிஸ்பாஹ் பாத்திமா 1161 மதிப்பெண்கள் பெற்று கீழக்கரை பள்ளி மாணவ, மாணவிகளில் முதலிடம் பெற்றுள்ளார்.
இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி, ஹமீதியா பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய இரு பள்ளிகளும் 100% சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியின் மாணவி ஆயிசத்துல் ஹப்ஸா அதிக மதிப்பெண்ணாக 1151 பெற்றுள்ளார். கிழக்குத் தெரு ஹைராத்துல் ஜலாலியா பள்ளி அதிக மதிப்பெண்ணாக 1118ம் 98 % சதவீத தேர்ச்சி விகிதமும் பெற்றுள்ளது.
ஹமீதியா மெட்ரிக் பள்ளி மாணவி அதிக மதிப்பெண்ணாக 1154 பெற்றுள்ளார் 95% தேர்ச்சியை இப்பள்ளி பெற்றுள்ளது. ஹமீதியா பெண்கள் மேல்நிலை பள்ளியில் 220மாணவிகளில் 220மாணவிகள் தேர்வு பெற்று 100சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.இப்பள்ளியில்அதிக மதிப்பெண்னாக 1128 மாணவி பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
whishes 2 all
ReplyDelete