கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா அவர்கள் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் கே.பி.முனுசாமி மற்றும் உயர் அதிகாரிகளை நேற்று (27.07.2012) சென்னையில் சந்தித்தார். அமைச்சர் அவர்களின் வழிக்காட்டுதலின் படி, தமிழ் நாடு தலைமை நகராட்சி நிர்வாகத் துறை ஆனையர் திரு சந்திர காந்த் பி. காம்ப்ளே ஐ.ஏ.எஸ். அவர்களை சந்தித்து கீழக்கரைக்கு தனி கமிஷனர் நியமனம் உள்ளிட்ட கீழக்கரை நகர் நலன் குறித்த பின் வரும் கோரிக்கைகளை செயல்படுத்துமாறு வலியுறுத்தினார்.
- கீழக்கரைக்கு உடனே தனி நகராட்சி ஆனையர் நியமிக்கவேண்டும்
- நகர் நல பணிகளுக்காக 3 தொழில் நுட்ப பணியாளர்களை நியமிக்கவேண்டும்
- நகராட்சி திட்டப்பணிகளுக்காக ரூ1.66 கோடி நகராட்சி வைப்பு நிதியை திரும்ப பெறுவது
இந்த கோரிக்கைகளை பரிசீலித்த தலைமை நகராட்சி நிர்வாக துறை ஆணையர், கீழக்கரைக்கு தனி நகராட்சி ஆணையரை நியமிக்கும் பணி ஒரு மாதத்தில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார். தமிழகம் முழுவதும் 40 நகராட்சி ஆணையர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் , முதல் கட்டமாக 20 பேரை நியமிக்கும் பணி வரும் மாதம் இறுதியில் நடைபெறும் என்றும் அதில் கீழக்கரை கண்டிப்பாக இடம்பெற இருப்பதாகவும் தெரிகிறது. இதனால் பொது மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment