கீழக்கரையில்
நிலவி வரும் அறிவிக்கப்படாத 14 மணி நேர மின் வெட்டு அமலில் இருப்பதால்,
அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பது மனைவி மக்களின் பசியை போக்க அயராது
'உழைத்துக் கொண்டிருக்கும் பாட்டாளிகளும்', கணவன் ஈட்டும் குறைவான
வருவாயிலும் உலை பொங்க வைக்கும் 'அடுப்பாங்கரை இல்லத்தரசிகளும்' தான்.
கீழக்கரையில் தற்போது மின்சாரத்தை நம்பி தொழில் புரிந்த பலர், வேறு
தொழில்களுக்கு மாறியுள்ளனர். அல்லது மின்சாரத்துக்கு மாற்றான தொழில்களை
துவங்கியுள்ளனர். இன்னும் வேறு சிலர் இருக்கும் தொழிலை சரிவர செய்ய
முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் தொடர் மின்வெட்டு இருந்தாலும்,
அரை சாண் வயிற்றுக்கு உழைக்க வேண்டிய சூழலில் சிலர் தன்னம்பிக்கையுடன்
தொழில் நடத்தி வருவது மெய் சிலிர்க்க வைக்கிறது.
இது குறித்து
முஸ்லீம் பஜார் (லெப்பை மாமா டீக் கடை அருகில்) சலூன் நடத்தி வரும் திரு.
தயாளன் அவர்கள் கூறும் போது "இது போன்ற ஒரு மோசமான மின் வெட்டினை நான்
கண்டதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் வருகை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து,
சம்பாத்தியம் மிகவும் குறைந்து போனது. தொடர் மின் வெட்டால் எமெர்ஜென்சி
லைட் கூட சார்ஜ் செய்ய முடியவில்லை. ஜெனரேட்டர், UPS போன்றவை வைத்து
பயன்படுத்தினால் தாக்கு பிடிக்க முடியாது. அதனால் தான், சீப்பில்
மெழுகுவர்த்தி ஏற்றி அதன் வெளிச்சத்தில் முடி திருத்தம் செய்து வருகிறேன்.
இந்த புது யுக்தியை கடைபிடிப்பதால், மிகக் குறைந்த செலவில் இப்பொது
ஓரளவுக்கு வருமானம் வருகிறது."என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இது குறித்து புது கிழக்குத் தெருவைச் சேர்ந்த இல்லத்தரசி ஆசிபா அமீன் அவர்கள் கூறும் போது "காலையில் இருந்து கால் கடுக்க நின்று, மூன்று வேலையும் சமைக்க அடுப்பாங்கரையிலேயே குறைந்தது எட்டு மணி நேரங்கள் கழிந்து விடுகிறது. கீழக்கரையில் தற்போது கட்டப்பட்டு வரும் கோழிக்கூடு போன்று அமைந்திருக்கும் சமையல் அறைகளில் புகை போக்கிகள் இல்லை. இதனோடு மின் விசிறியும் இயக்க முடியாததால், நாள் முழுதும் வெக்கையில் உழன்று வருகிறோம். எப்போது மின்சாரம் வரும் ? எப்போது மின்சாரம் போகும் ?? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. எது எப்படி இருந்தாலும், உழைத்துக் களைத்து வரும் கணவருக்கும், படித்துக் களைத்து பிள்ளைகளுக்கும் அடுப்பாங்கரையில் அடைக்கலமாவதை மின்வெட்டு தடுக்க முடியாது தானே..." என்று பொறுப்புடன் தெரிவித்தார்.
Comments :
- KeelaiPamaran Karuthu : மின்சார துண்டிப்பை உணர்த்தும் அழகான படம் தோழரே அதே சமயத்தில் பணி செய்யும் தோழருக்கு இருமலோ,தும்மலோ ஏற்பட்டால் மெழுகுவரத்தி முகத்தில் தெறித்து நிலைமை ஆபத்தாகி விடும்.இப்படி செய்ய வேண்டாம் என அறிவுறுத்துங்கள்.இந்த மின் வெட்டால் சிகை அலங்கார தொழில் கூட செய்யமுடியவில்லை...எப்போது தீரும் இந்த மின்சார வேதனை
- கீழக்கரை 'புதிய ஒற்றுமை' : நல்ல பதிவு.. கீழக்கரையை பொருத்தமட்டில் மின்னல் போல வந்து மறையும் மின்சாரத்தினால் பாட்டளிகளின் வாழ்க்கையில் டன் கணக்கில் சோகங்கள் இடியாய் வந்து இறங்கி இருக்கிறது. இதனால் வாழ்க்கை சக்கரத்தை நகர்த்த பாடாய்படும் பாட்டளிகளின் எதிர் நீச்சல் சாகசங்கள் அனு தினமும் நடந்து கொண்டிருப்பதை உணர முடிகிறது. மின் வெட்டின் கும்மிருட்டிலும் தன்னம்பிக்கையோடு உழைக்க துணிந்திருக்கும், தம்பி தயாளா.. ஆபத்தான வழிகளை விடுத்து, இன்னும்கொஞ்சம் சிந்தித்து மாற்று வழிகளை தேடலாமே..
ஏழை மற்றும் பாவப்பட்ட ஏழை தொளிலாளர்களின் வயிற்று பாடுக்காக படும் தொடர் தொல்லைகளை (மின் தடையால்) படும் துயரங்களை பரிபூரணமாக நம்மால் உணர முடிகிறது, அரசியல் பித்தலாட்டக்காரர் களைத் தவிர..
ReplyDeleteஅதற்காக சிகை அலங்கரிப்பாளர் தம்பி தாயாளனின் வழிமுறையை எந்த காரணத்தை முன்னிட்டும் ஏற்றுக் கொள்ளமுடியாது /ஒப்புக் கொள்ள முடியாது. எத்தகைய சூழ்நிலையிலும் யாரும் ஊக்கப்படுத்தவும் கூடாது. கீழ்க்கரை பாமரன் பதிவில் குறிப்பட்டு காட்டியது போல அதில் உள்ள ஆபத்தை பூரணமாக சிந்திக்க வேண்டும்.. கஷ்டம் தான், அதற்காக கண்ணுக்கு தெரிந்த ஆபத்தை விலை கொடுத்து வாங்கவா முடியம் ??
தற்சமயம் சீன எல்டிஇ, எவரெடியில் சாதாரண பேட்டறியில் இயங்கக்க கூடிய விளக்குகள் பாஜாரில் தாராளமாக கிடைக்கிறது.. நிர்வாகச் செலவு கூடுதலாகும் என அச்சப்பட்டால், கூலியில் ஐந்து ரூபாய் கூட்டிக் கொள்ள வேண்டியது தான்.. வடை, சாயாவிலிருந்து மூக்கு பொடி வரை எது தான் கூடவில்லை