கீழக்கரை துணை மின் நிலையத்தில் நாளை (16.04.2013) செவ்வாய் கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழக்கரை, ஏர்வாடி, முகம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம், காஞ்சிரங்குடி, தேரிருவேலி, உத்திரகோசமங்கை, களரி, கொம்பூதி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், காலை 9 மணி முதல் 5 மணி வரை 'மின் விநியோகம் இருக்காது' என்று மின் வாரிய உதவி செயற் பொறியாளர் திரு .கங்காதரன் தெரிவித்துள்ளார்.
கீழக்கரை பகுதியில் ஏற்கனவே 7 மணி நேர அறிவிக்கப்பட்ட மின் வெட்டும்,
நள்ளிரவு - 12 மணி முதல் 1 மணி ( 1 மணி நேரம் )
அதி காலை - 6 மணி முதல் 9 மணி வரை ( 3 மணி நேரம் )
நண்பகல் - 12 மணி முதல் 2 மணி வரை ( 2 மணி நேரம் )
மாலை - 6 மணி முதல் 7 மணி வரை ( 1 மணி நேரம் )
இது தவிர அறிவிக்கப்படாத மின் வெட்டாக பல மணி நேரங்களும் அமலில் ஓராண்டுக்கும் மேலாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆகவே நாளை ஏற்பட இருக்கும் நீண்ட நேர மின் வெட்டினை சமாளிக்க, பொது மக்கள் அனைவரும் தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்து கொள்ளுமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment