கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் மழலை ஆரம்பக் கல்வியான எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்பை நிறைவு செய்து, முதலாம் வகுப்புக்கு அடியெடுத்து வைக்கும் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் முகமாக, அவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் நேற்று முன் தினம் (13.04.2013) சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தெற்கு தெரு ஜமாத் தலைவர் ஜாஹிர் ஹுசைன் களஞ்சியம் தலைமை வகித்தார். பள்ளிகளின் தாளாளர் M.M.K.முகைதீன் இப்ராகிம், தெற்குத் தெரு ஜமாத் செயலாளர் பவுசுல் ரஹ்மான், உறுப்பினர் அப்துல் வாஹித், கல்விக்குழு தலைவர் சீனி முகம்மது, சப் கலெக்டர் ரவீந்தரன், ஆர்.டி.ஓ குணசேகரன், ஹமீதியா தொடக்கப்பள்ளி தாளாளர் சிராஜீதீன், முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜகாபர், இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி முதல்வர் மேபல் ஜஸடிஸ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியர் சார்த்தோ வரவேற்புரை ஆற்றினார். யு கே ஜி மாணவி பாத்திமா ஹாலிஷா கிராஅத் ஓதினார்.எதற்காக இந்த பட்டமளிப்பு விழா ? என்கிற தலைப்பில் யு கே ஜி மாணவி ஆயிஷத் நஃபா விளக்கி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் முன்னாள் கவுன்சிலர்கள் M.M.K. முகம்மது காசிம், ஜமால், வேல்சாமி மற்றும் பெற்றோர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மழலை மாணவ, மாணவிகளுக்கான பட்டங்களை, இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் M.M.K.முகைதீன் இபுறாகீம் வழங்கி, குழந்தைகளின் எதிர் கால கல்வி வளம் பெற ஊக்கப்படுத்தினார்.
No comments:
Post a Comment