கீழக்கரையில் மிக வேகமாக உருவெடுத்து வரும் நகராக்கத்தின் தாக்கத்தால், பழமை மிளிரும் பல வீடுகளை இடித்து விட்டு, நவீன வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டுவதில் மக்கள் நாட்டம் கொண்டுள்ளனர். இதனால் பழமைகளை தாங்கி நிற்கும் வீடுகள் எல்லாம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. கீழக்கரை நகரில் அங்கொன்றும், இங்கொன்றுமாக பழைமைகளை தாங்கி, கம்பீரமாக காட்சியளிக்கும் கட்டிடங்களும், வீடுகளும், வியாபாரத் தளங்களும் இன்னும் 15 வருடங்களுக்குள் முற்றிலுமாக காணாமல் போய் விடும் நிலையே உள்ளது.
பட விளக்கம் : கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்திற்கு பாத்தியப்பட்ட, இந்த மீன் சந்தை கட்டிடம் 120 வருடங்கள் பழமையானது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் (கொளுக்கி ஓடுகள்) கொழும்பு ஓடுகள் அததனையும், இன்னும் எவ்வித சிதிலமும் அடையாமல் புதிததாக பொருத்தப்பட்ட ஓடுகள் போல் மிளிர்வதை காணலாம்.
இடம் : பழைய மீன் கடை, சேரான் தெரு, கீழக்கரை
பட விளக்கம் : கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்திற்கு பாத்தியப்பட்ட, இந்த மீன் சந்தை கட்டிடம் 120 வருடங்கள் பழமையானது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் (கொளுக்கி ஓடுகள்) கொழும்பு ஓடுகள் அததனையும், இன்னும் எவ்வித சிதிலமும் அடையாமல் புதிததாக பொருத்தப்பட்ட ஓடுகள் போல் மிளிர்வதை காணலாம்.
கீழக்கரையில் மிகவும் தொன்மையான வரலாற்றுடன் காட்சி தரும் பழைமை கட்டிடங்கள் பெரும்பாலும் பழைய குத்பா பள்ளி தெரு, பரதர் தெரு, பெத்தரி தெரு, சேரான் தெரு, நடுத் தெரு, கிழக்குத் தெரு பகுதிகளில் இருக்கிறது.அவற்றுள் பெரும்பாலானவை பராமரிக்கப்படாமல், சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இது போன்ற கட்டிடங்கள் கீழக்கரை நகரின் பண்டைய கலாச்சாரத்தை பறை சாற்றும் வரலாற்று சின்னங்களாக இருக்கிறது.
நம் கீழக்கரையின், எதிர் கால சந்ததியினர் இது போன்ற பழமையான கட்டிடங்களை காண ஆவல் கொள்ளும் காலத்தில், இவை புகைப்படமாகவாவது, நம் கைகளில் தவழட்டும் என்கிற பேராவலில் இவற்றை வெளியிட முனைகிறேன். இதன் தொடர்ச்சியாக வரும் பதிவுகளில் பழமையான கட்டிடங்களின் வரலாறுகள், வடிவமைப்புகள், கடந்து வந்த பாதைகள் குறித்து விரிவாக பதிகிறேன்.
பொறுத்திருங்கள்... பழமைகள் பேசுவோம்..!
FACE BOOK COMMENTS :
தம்பி எங்கள் வடக்கு தெருவையும் வரிசையில் சேர்த்து கொள்ளுங்கள் இன்னும் எங்கள் தெருவில் ரேஷன் கடை அருகில் மிக பிரமாண்டமாய் பீ கே எஸ் குடும்பத்திற்கு சொந்தமான ஜமீன் கோட்டை போல் ஒரு பழமையான வீடு உள்ளது.- நசிர் சுல்தான். வடக்கு தெரூ கீழக்கரை
ReplyDeleteதம்பி உங்கள் வரிசையில் எங்கள் வடக்கு தெருவையும் சேர்த்து கொள்ளுங்கள். வடக்கு தெரு ரேஷன் கடை அருகில் பீ கே எஸ் குடும்பத்திற்கு சொந்தமான ஜமீன் கோட்டை போல் ஒரு வீடு உள்ளது.அதுவும் நம் பழைய கட்டிட கலைக்கு சான்றாக பறை சாற்றி கொண்டு இருக்கிறது. நசிர் சுல்தான்
ReplyDelete