எழில் கொஞ்சும் கடற்கரை நகரமான கீழக்கரை நகரம், தொன்மையான சரித்திரப் பதிவுகளையும், புரதான வரலாற்று சின்னங்களையும் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. கீழக்கரை நகரின் பல்வேறு பகுதிகளிலும், இன்னும் காலத்தால் அழியாத, கலை நயத்துடன் மிளிரும் பழமையான வீடுகளும், வியாபாரத் தளங்களும் காணக் கிடைக்கிறது.
அவற்றுள் கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெரு அருகே உள்ள தச்சர் தெருவில், 150 வருட பழமையான அம்பலார் வீடுகள், அழகிய தேக்கு மர வேலைப்பாடுகளுடன், பார்ப்போரின் கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் காட்சி தருகிறது.
இந்த அம்பலார் வீடு, கீழக்கரை அலி பாட்சா மாமா அவர்களின் இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது. கீழக்கரையில் வாழ்ந்த அம்பலம் பாரம்பரியத்தில் வந்த அம்பலார்கள் 'ஊர் நாட்டமை' எனும் மதிப்புடன் வாழ்ந்திருக்கிறார்கள். கீழக்கரை முன்னவர்கள் அமபலார்களுக்கு, மிகுந்த மதிப்பும், மரியாதையும் வழங்கி வந்துள்ளார்கள்.
இந்த அம்பலார் வீடு, கீழக்கரை அலி பாட்சா மாமா அவர்களின் இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது. கீழக்கரையில் வாழ்ந்த அம்பலம் பாரம்பரியத்தில் வந்த அம்பலார்கள் 'ஊர் நாட்டமை' எனும் மதிப்புடன் வாழ்ந்திருக்கிறார்கள். கீழக்கரை முன்னவர்கள் அமபலார்களுக்கு, மிகுந்த மதிப்பும், மரியாதையும் வழங்கி வந்துள்ளார்கள்.
கீழக்கரையில் இன்றும் பெரிய அம்பலம் தெரு, மதார் அம்பலம் தெரு, சின்ன அம்பலம் தெரு எனும் பெயரில் தெருக்கள் காணப்படுகின்றன. கீழக்கரை தச்சர் தெருவில் காண்போரை சுண்டி இழுக்கும் இந்த அம்பலார் வீட்டினை, கி.பி.1880 ஆம் ஆண்டு வாக்கில், பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த, தனவாய் மறைக்கா என்கிற அஹமது சுல்தான் அவர்கள் நிர்மாணித்து இருக்கிறார். பின்னாளில் 1945 ஆம் ஆண்டுகளில் ஆனா. சீனா. சேகு மதார் அம்பலம் அவர்கள் இந்த வீட்டினை புனரமைப்பு செய்து இருக்கிறார்.
பொறுத்திருங்கள்.... பழமைகள் பேசுவோம் தொடரும் >>>>>>
FACE BOOK COMMENTS :
அன்பு இளவலுக்கு,
ReplyDeleteவாழ்த்துக்கள் பல...அருமையான பதிவு இது..எங்க பக்கமெல்லாம் "அம்பலக்காரர்கள்" என்று பெரிய குடும்பத்தவரை அழைப்பார்கள். அவர்கள் நீதிமான்களாகவும், மரியாதைக் குரியவர்களாகவும் இருந்துள்ளார்கள்.....கீழக்கரையில் இந்த "அம்பலார்கள்" பற்றிய பதிவு எதிர்காலத் தலைமுறையினருக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
என் மனைவிக்கு நமதூர் வழக்கப்படி சீதனமாக கிடைத்து நாங்கள் வாழும் இல்லத்தைப் பற்றி சர்வ தேச அளவில் வியாபித்து ஜீவித்து வரும் அனைத்து கீழக்கரை மக்களும் மற்றும் உள்ளூர், வெளியூர் கீழக்கரை வாசிகளும் அறிந்து கொள்ளும் வண்ணம் சிறப்பு பதிவு கீழை இளைவயவன் வளைத் தளத்தில் கொண்டு வந்தமைக்கு உளமார்ந்த இனிய நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ReplyDeleteஅந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்களே மூக்கில் விரல் வைத்து, இது நாம் குடி இருக்கும் வீடு தானா என ஆச்சரியப்படும் படும் வண்ணம் அருமையான படப்பிடிப்பு. கை தேர்ந்த தொழில் முறை புகைப்பட கலைஞர்களையும் மிஞ்சும் விதமாக உள்ளது.மாஷா அல்லா. இதை பாராட்ட வார்த்தைகளை தேடியதில் எதை தேர்ந்தெடுப்பது எதை விடுவது என பெரும் திண்டாட்டமாகி இருக்கிறது.
இப்போது நோன்பு காலமாக இருப்பதால்,பின்னொரு நாளில் சீலாமீன் கருவாட்டு ஆணத்துடன் மஞ்சச் சோறு, மாசிக்கறி,நெத்திலி க்ருவாடு வறுவல், முருங்கக்கீரை கூட்டுடன் அவித்து பொரித்த முட்டையுடன் பனை ஓலைப் பட்டையில் உணவு வழங்க நாடி உள்ளேன். இன்ஷா அல்லா.
> LKS MOHAMED MEERA MOHIDEEN நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. அவர்களின் நீதி பரிபாலனம் , நன் நடத்தையால் கிடைத்த மரியாதையை இன்றைய் தலைமுறையிர் இனறு செய்திகளாக அறியும் போது ஆச்ச்ரியம் மூட்டுகிறது. மாஷா அல்லா
ReplyDeleteமிக்க நன்றி அலி பாட்சா மாமா, இறைவன் நாடினால், தாங்கள் தரவிருக்கும் அன்பின் விருந்தில் பங்கு கொள்ள மிகுந்த ஆவாலாய் இருக்கிறேன். அதே நேரம், அந்த விருந்தில் கீழக்கரையின் வரலாறு ஆய்வாளர். நண்பர் அபு சாலிஹ் அவர்களும் பங்கு கொள்வது தான் ஏற்புடையதாக இருக்கும் என்பது இந்த இளையவனின் சிறிய விண்ணப்பம்.
ReplyDeleteஏனெனில் நான், தங்கள் இல்லத்திற்கு வருகை புரிந்த நாளை நினைவு கூர்கிறேன். அன்றைய தினம், வரலாறு ஆய்வாளர். நண்பர் அபு சாலிஹ் அவர்கள், நம்மோடு அம்பலத்தார்களின் சரித்திரங்களை கதைத்தவாறு, புகைப்படங்களை பலவாறு எடுப்பதற்கு எவ்வாறெல்லாம் பேருதவி புரிந்தார்கள் என்பதை நாமறிவோம்.
கீழக்கரை நகரில் எத்தனையோ அற்புதமான கலை நயமிக்க கட்டிடங்கள் எல்லாம், சிதைவுற்று உருத் தெரியாமல் போய் விட்டது. மேலும் தங்களிடம் என்னுடைய பேராவல் எல்லாம், இது போன்ற கலை நயம் மிக்க பொக்கிசங்களை, இன்னும் பல நூறு ஆண்டுகள், அதன் வடிவம் மாறாமல், எதிர் கால தலைமுறையினருக்கு தர, முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.