மறைந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளான, 'ஜூலை 15' ஆம் நாளை, ஆண்டு தோறும் 'கல்வி வளர்ச்சி நாளாக' கொண்டாடுவது என தமிழக அரசு முடிவு செய்து,அது அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் கல்வி குறித்த பேச்சுப் போட்டிகள், கட்டுரை போட்டிகள், வினாடி - வினா போன்றவை நடத்தப்பட்டு, மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நேற்று (15.07.2013) காமராஜரின் 107வது பிறந்த நாள் ஆகும்.

இந்நிலையில் கீழக்கரை வடக்குத் தெரு முஹைதீனியா மெட்ரிக்
இந்நிலையில் கீழக்கரை வடக்குத் தெரு முஹைதீனியா மெட்ரிக் மேனிலைப் பள்ளி மற்றும் முஹைதீனியா நடுநிலைப் பள்ளிகளின் சார்பாக, கல்வி வளர்ச்சி நாள் தொடர் நடை பயணம் நேற்று காலை 10.30 மணியளவில் நடை பெற்றது. இதனை கீழக்கரை காவல் துறை துணை கண்காணிப்பாளர். திரு.சோம சேகர் மற்றும் காவல் துறை ஆய்வாளர். திரு.கணேசன் ஆகியோர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இதில் நூற்றுக்கணக்கான முஹைதீனியா பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்று, கல்வியின் முக்கியத்துவம் குறித்த பதாகைகளை ஏந்தியவாறு, கல்வி விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். கீழக்கரை முக்கு ரோடு பகுதியிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் வள்ளல் சீதக்காதி சாலை, நடுத் தெரு பாபு ஆட்டோ ஸ்டாண்ட், தெற்குத் தெரு வழியாக முஹைதீனியா பள்ளியை சென்றடைந்தது.
இந்த தொடர் நடை பயணத்தில் முஹிதீனியா கல்விக் குழுவின் தலைவர் முஹைதீன் இபுறாஹீம், செயலாளர் .டாக்டர் ராசிக்தீன் (கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவர்), உதவி செயலாளர் அஹமது மிர்ஷா, பொருளாளர். பசீர் அஹமது, ரோட்டரி சங்க செயலாளர் சுப்ரமணியன், முன்னாள் ரோட்டர சங்க தலைவர். ஆசாத் ஹமீத், ரோட்டரியன் நூர் ஆப்டிகல்ஸ் ஹசன், ரோட்டரியன் இண்டோ அராப் சதக்கத்துல்லாஹ், கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் ஹாஜா அனீஸ், மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் பொருளாளர். முஹம்மது சாலிஹ் ஹுசைன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
FACE BOOK COMMENTS :
Like · · Unfollow Post · Share · Edit
FACE BOOK COMMENTS :
Like · · Unfollow Post · Share · Edit
No comments:
Post a Comment