கீழக்கரை புதிய நிலையம் அருகே தீனியா மெட்ரிகுலேசன் பள்ளிக்கு செல்லும் பாதையில் ஒரு இரும்பு மின் கம்பம் உள்ளது. அந்த மின் கம்பத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்னர், கனரக வாகனம் ஒன்று தறி கெட்டு மோதியதில், முற்றிலும் சேதமடைந்து, அதன் கீழ் பகுதி வளைந்து நிற்கிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளது. மேலும் இந்த மின் கம்பத்திலிருந்து செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் மிகத் தாழ்வாக தொங்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக இயங்கி வரும் இடமாகும். பேருந்து நிலையம், மீன் மார்க்கெட், மின் கட்டண வசூல் மையம், பள்ளிகள் போன்றவை இதனருகே உள்ளதால், மக்கள் நடமாட்டமும் வாகன போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. இப்பகுதியை கடந்து செல்பவர்கள், "எங்கே தலையில் விழுந்து விடுமோ..?" என்கிற அச்சத்துடன் செல்கின்றனர்.
இது குறித்து கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை (KMT) செயலாளர். S.இஸ்மாயில் அவர்கள் கூறும் போது "மின் கம்பத்தில் வாகனம் மோதிய உடனே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம். ஆனால் பயன் ஏதுமில்லை. அதிகாரிகள் வந்து ஆய்வு செய்ததோடு சரி. இன்று வரையிலும் மின்கம்பத்தை சீர் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மின் கம்பத்தை சேதம் ஏற்படுத்திய லாரி உரிமையாளரிடமிருந்து உரிய தொகையை, உடனடியாக வசூலித்துக் கொண்ட மின் துறையினர், இன்னும் மின் கம்பத்தை மாற்றாமல் பாராமுகமாக இருக்கின்றனர்." என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
FACE BOOK COMMENTS :
FACE BOOK COMMENTS :
உணர்ச்சி அற்ற ஜென்மங்களுடன் (சூடு,சொரணை அற்ற கீழக்கரை மின் வாரியம்) முட்டி மோதி போராடுவதில் என்ன பயன்? பாரிய விளைவுகளை சந்திக்க மனதை திடப்படுத்திக் கொண்டு தயாராக வேண்டியது தான்.வேறு வழி? படைத்தவன் நம் அனைவரையும் காப்பானாக. ஆமீன்
ReplyDeleteமேலும் நகர் பொது நல அமைப்புகள் இந்த உயிர் கொல்லி பிரச்சனையை இனியும் காலம் தாமதம் இல்லாமல் சட்ட மன்ற மக்கள் பிரதிநிதி மற்றும் மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
மிகச் சில காலத்திற்கு முன் இது போன்ற உயிர் கொல்லி பணி களுக்கு நிரந்தர தீர்வு காண கீழக்கரை நகர் மின் வாரியத்திற்கு மட்டும் அரசு தரப்பில் ரூபாய் ஆறு கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி நிலவியதே. அது என்ன வாயிற்று? அதையும் ஆட்டையை போட்டு விட்டார்களா படு பாவிகள்?