கீழக்கரை அஹமது தெருவில், சிறப்பாக செயல்பட்டு வரும் மதரஸதுல் அல்-மனார் சிறுவர்கள் அரபி மதரசாவின் ஆண்டு விழா, அஹமது தெரு ASWAN பொது நல சங்கத்தின் சார்பாக, நாளை (07.07.2013) ஞாயிற்றுக் கிழமை மாலை 7 மணியளவில், பெண்கள் தொழுகைப் பள்ளியில் நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழை ASWAN பொது நல சங்கம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து ASWAN பொது நல சங்கத்தின் செயலாளர். 'மஸ்தான்' என்கிற அஹமது இபுறாஹீம் அவர்கள் கூறும் போது "இறைவன் அருளால், இந்த வருடம் மதரசாவில் பயின்ற 100 க்கும் மேற்பட்ட சிறுவர்கள், சிறுமியர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் குறித்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி வினா போட்டி, கிராஅத் போட்டி, குர்ஆன் சூராக்கள் ஒப்புவித்தல் போட்டி போன்றவைகளை நடத்தி 70 பரிசுகளை, இவ்விழாவில் வழங்க இருக்கிறோம்.
மார்க்க அறிஞர்களும், நல்ல பயனுள்ள தலைப்புகளில் உரையாற்ற இருக்கிறார்கள். இது போன்று இளம் வயதில் மார்க்க கல்வியை கற்கும் பொருட்டு ஊக்குவிக்கும் போது, இறையச்சம் உடைய நல்ல மனிதர்களை, சிறந்த இளைய தலை முறையினரை உருவாக்க முடியும். இந்த விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
FACE BOOK COMMENTS :
FACE BOOK COMMENTS :
No comments:
Post a Comment