தமிழகத்தில் போலீசாருக்கு உதவியாக, 'தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை' உருவாக்கப்படும். இதன் மூலம், 50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும். ஆண்டுக்கு, 10 ஆயிரம் பேர், தேர்வு செய்யப்படுவர்' என, கடந்தாண்டு, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அறிவிப்பை தொடர்ந்து, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
தமிழகம் முழுவதும், முதற்கட்டமாக 10,500 பேர், இப்பணிக்காக தேர்வு செய்யப்படுகின்றனர். இப்படையில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம், நேற்று (02.09.2013) முதல் துவங்கியது.
தமிழகம் முழுவதும், முதற்கட்டமாக 10,500 பேர், இப்பணிக்காக தேர்வு செய்யப்படுகின்றனர். இப்படையில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம், நேற்று (02.09.2013) முதல் துவங்கியது.
மாநகர்களில், மாநகர கமிஷனர் அலுவலகங்களிலும், மாவட்டங்களில், எஸ்.பி., அலுவலகங்களிலும், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இராமநாதபுரத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காலை முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இங்கு வந்த இளைஞர்கள் பலர், ஆர்வத்துடன் விண்ணப்பங்களை பெற்று சென்றனர். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அக்., 1ம் தேதிக்குள், வாங்கிய இடத்திலேயே வழங்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ் நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு 360 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இணைய தளத்திலிருந்து இதற்கான விண்ணப்பங்களை, பதிவிறக்கம் செய்து கொள்ள, பின் வரும் லிங்கை சொடுக்கவும்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் அவரவர் தகுதிக்கேற்ப இந்த படையில் இணைத்துக் கொள்ளப் படுகிறார்கள். இவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 மதிப்பூதியமாக வழங்கப்படும். இதற்கான உடல் தகுதி தேர்வு உள்ளிட்டவை அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
எழுத்து தேர்வு நவம்பர் 10-ந் தேதி நடைபெற உள்ளது. கீழக்கரை பகுதியில் ஆர்வமுடிய இளைஞர்கள், தாமதிக்காமல் உடனடியாக விண்ணப்பிக்கும் படி கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment