துபாயில் இலவச சட்ட உதவி முகாம் 06.09.2013 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி. நந்தகுமார் அவர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்றம், கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வழக்கறிஞர் அலுவலகங்களைச் செயல்படுத்தி வருபவர் வழக்கறிஞர் வி. நந்தகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமீரக வாழ் தமிழ் மக்கள், இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி, இலவச சட்ட உதவி பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழகத்தில் தங்களுக்குத் தேவையான சட்ட உதவிகள் குறித்து ஆலோசனை பெறலாம். இந்த முகாமில் கலந்து கொள்ள இயலாதவர்கள் தொலைபேசி வாயிலாகவும் இலவச ஆலோசனை பெறலாம்.
அமீரகத்தில் மேலதிக விபரங்கள் பெற : 050 1321722 / 050 51 96 433
மின்னஞ்சல் : Advocatenandu10@yahoo.com
மின்னஞ்சல் : Advocatenandu10@yahoo.com
சென்னையில் வெளிநாடு வாழ் இந்தியர்க்கான வழிகாட்டி மையம்
வழக்கறிஞர் வி. நந்தகுமார் அவர்களது முயற்சியின் காரணமாக சென்னையில் வெளிநாடு வாழ் இந்தியர்க்கான வழிகாட்டி மையம் துவங்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டி மையத்தில் இலவசமாக சட்ட ஆலோசனை, மருத்துவ ஆலோசனை, மேற்படிப்பு வழிகாட்டுதல், வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த வழிகாட்டுதல், வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிரச்சனைகள் குறித்து ஊடகங்கள் மூலம் வெளிக்கொணர உதவிடுதல், குடும்ப நல ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளைப் பெறலாம்.
தொடர்பு எண் : 0091 – 9566 973 462 மின்னஞ்சல் : helpnri2011@yahoo.com
தகவல் : முதுவை ஹிதாயத் அவர்கள்
No comments:
Post a Comment