கீழக்கரையிலிருந்து, இராமநாதபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் (மின்சார வாரியம் அருகே) டாஸ்மாக் மது பானக் கடை (கடை எண் : 6983) கடந்த ஆண்டு ஆரம்பத்தில் திடீரெனெ திறக்கப்பட்டது. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்திருக்கும் அந்த பகுதியில், ஆம்னி, ஆட்டோ போன்ற வாகனங்களில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பெரும் அச்சம் அடைந்து வருகின்றனர்.
காலை நேரங்களில் மின்சார வாரிய அலுவலகத்திற்கு வரும் பொது மக்களும் 'குடி மகன்களால் என்ன நடக்குமோ..?' என கடும் பீதியில் உறைந்துள்ளனர். இந்த கடையில் போதையேற்றும் குடிமகன்களால், பல நேரங்கள் போக்குவரத்திற்கு இடையூறும், விபத்துக்களும் நடந்து வருகிறது.
இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த பதிவுகளை காண கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.
கீழக்கரையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் 'டாஸ்மாக்' மது பானக்கடை - விரைவில் அகற்றப்பட பொதுமக்கள் கோரிக்கை!
கீழக்கரை நெடுஞ்சாலை ‘டாஸ்மாக்’ கடை வாசலில் விபத்து – ‘குடிமகன்’ போதையில் சாலையை கடந்ததால் விபரீதம் !
இந்நிலையில் கீழக்கரை மக்களை நலப் பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக, கடந்த 13.05.2013 அன்று, மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், இந்த டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக அகற்றக் கோரி மனு கொடுக்கப்பட்டது.
இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த பதிவுகளை காண கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.
கீழக்கரையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் 'டாஸ்மாக்' மது பானக்கடை - விரைவில் அகற்றப்பட பொதுமக்கள் கோரிக்கை!
கீழக்கரை நெடுஞ்சாலை ‘டாஸ்மாக்’ கடை வாசலில் விபத்து – ‘குடிமகன்’ போதையில் சாலையை கடந்ததால் விபரீதம் !
கீழக்கரை - இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் உள்ள
டாஸ்மாக் மதுபானக் கடையை, விரைந்து அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு -
கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகம் முயற்சி !
இந்நிலையில் கீழக்கரை மக்களை நலப் பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக, கடந்த 13.05.2013 அன்று, மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், இந்த டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக அகற்றக் கோரி மனு கொடுக்கப்பட்டது.
அதன் பின்னர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த டாஸ்மாக் மது பானக் கடையை அகற்றுவது சம்பந்தமாக, இராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு கடை எண் : 6983 மாற்றுவது சம்பந்தமாக பெறப்பட்ட புகாருக்கு தக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு விட்டதாக பதில் தரப்பட்டுள்ளது.
அதே வேளையில் உயர்நீதி மன்ற உத்தரவுப்படி, கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகள் மூடப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இன்றைய தேதி வரை, டாஸ்மாக் மது பானக் கடை எண் : 6983 ஐ, இழுத்து மூடுவது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம் சார்பாக, கீழக்கரை- இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில், கடந்த 26.08.2013 அன்று, மீண்டும் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மேலும் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
FACE BOOK COMMENTS :
- தங்கராசு நாகேந்திரன் ஆம் இதை முதலில் அகற்ற வேண்டும் நெடுஞ்சாலையில் இருப்பதால் மட்டும் அல்ல ஏராளமான கட்டிட தொழிலாளர்கள் மோர்க்குளம் பாளையம்பல் போகும் வழியில் இருப்பதால் அவர்கள் மனதை கெடுக்கும் இடத்தில் உள்ளது
- Keelakarai Ali Batcha ஆகஸ்ட் 14,2013 வ்ரை இறுதி கெடு விதித்த உயர்நீதி மன்றத்தின் ஆணை என்னவாயிற்று? நடந்தது என்ன?
- கீழக்கரை 'புதிய ஒற்றுமை' கீழக்கரை மக்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்து வரும், இந்த டாஸ்மாக்கை அகற்ற அயராது போராடி வரும் தம்பி கீழை இளையவனின் முயற்சிக்கு வல்ல நாயன் துணை நிற்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.
- Nizar Nizar தம்பி கீழை இளையவனின் முயற்ச்சிக்கு எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு.ஆட்சி,அதிகாரம் அவங்கபக்கம் இருந்தாலும் ஆண்டவன் நம்மபக்கம் இருக்கான்.துணிந்துநில் தொடர்ந்துசெல் தோல்விகிடையாது தம்பி...
No comments:
Post a Comment