கீழக்கரை சாலை தெரு பழைய டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச் பகுதியில் இருந்து சிமெண்ட் ரோடு வரை கழிவு நீர்குழாய் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் நகராட்சி ஒப்பந்த வேலை கடந்த ஒரு வார காலமாக நடை பெற்று வருகிறது. இந்தப் பகுதியில் ஜேசிபி இயந்திரத்தால் தோண்டப்பட்டதால், வீடுகளில் இருந்து செல்லும் கழிவு நீர் குழாய்கள் சரமாரியாக உடைக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து விடப்படும் கழிவு நீர் செல்ல வழியில்லாமல், இந்தபகுதி முழுவதும் வழிந்தோடுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல கூட வழியின்றி பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த பகுதியில் கடந்த ஒரு வாரமாக வாகனப் போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் சிறுவர், சிறுமியர்கள், பெண்கள் சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர். மேலும் முறையாக பைப் ஜாயிண்ட்கள் பொருத்தப்படாமலும், கழிவு நீர் ஓடும் வாட்டம் சரியாக வைக்கப்படாமலும் வேலைகள் தரமற்று நடைபெற்று வருகிறது.
இடையிடையே கட்டப்பட்டு வரும் கழிவு நீர் சுத்தம் செய்யும் தொட்டிகளும் மிகக் குறைந்த ஆழத்தில் போடப்பட்டு வருகிறது. சிமிண்டு கலவைகள் சரியாகப் போடாமல் ஏதோ கடமைக்கு செய்வது போல் வேலை செய்து வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகத்தினர், தரமான வேலைகளை விரைவாக செய்து தருமாறு இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
COMMENTS :
இவை அனைத்தும் நமது ஊர் நகராட்சியின் அலட்சியம் தான் காரணம். டெண்டர் எடுத்த engineer வேலை நடக்கும் இடத்திற்கு வருவதில்லை. இதை அந்தந்த வார்டு கவுன்சிலேர்கள் முறையாக கண்டு கொள்வதில்லை. இதிலிருந்து இவர்கள் மத்தனப்போக்கும் அலட்சியமும் தெரிகிறது. ஆளுக்கு ஆள் மாநகராட்சி அலுவலகத்தில் சண்டை போட மட்டும் தன் லயக்கி இப்படி ஊர் ப்றேச்சனைகளை கவனிப்பதற்கு ஒருவருக்கும் நேரம் இல்லை.
COMMENTS :
பாதல சாக்கடை என்ற பெயரில் இவர்கள் செய்யும் கூத்தை நீங்கள் வந்து பார்த்தல் உங்களுக்கு தெளிவாக புரியும். இவர்கள் போடும் 8 இன்ச் பைப் தேவைக்கு குறைவாகவே உள்ளது. மேலும் பைப் சேர்க்கும் இடத்தில சரியாக பூசுவதில்லை. இது கண்டிப்பாக மக்களை ஏமாதுவடற்கு மட்டும் தன். கண்டிப்பாக நாளை அணைத்து தெருவிலும் ஜங்ஷன் இல் நீரில் பீரிட்டு தெருக்களில் ஓடுவதை நீங்கள் கண் குளிர பார்கதான் போகிறீர்கள்.
No comments:
Post a Comment