இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (02.10.2103) இரவு 10 மணி முதல் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்ய துவங்கியுள்ளது. இறைவன் அருளால், தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக கடும் வறட்சியில் சிக்கி தவித்து வந்த பொதுமக்கள் பெரிதும் சந்தோஷம் அடைந்துள்ளனர்.
இன்று காலை முதல் வானம் மேக மூட்டமாக காணப்பட்டாலும், அவ்வப்போது வெயிலும் அடிக்கிறது. தொடர் மழை பொழிவின் காரணமாக தெருக்களில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. பல இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் நிற்பதை காண முடிகிறது. இது போன்ற மழை நேரங்களில், பழைய கட்டிடங்களின் சிலாப்புகளுக்கு கீழ் நிற்பதை தவிர்ப்பது நல்லது.
பட விளக்கம் : அடாது பெய்யும் மழைக்குள்ளும், குடை பிடித்து வந்து வீட்டிற்கு காய்கறி வாங்கி செல்லும் சிறுவன் (இடம் : சாத்தான் காய்கறிக் கடை, அத்தியிலை தெரு)

No comments:
Post a Comment