கீழக்கரை நகராட்சிக்கு மத்திய மாநில அரசுகள் ஒதுக்கும் நிதிகள் குறித்தோ, நகராட்சியில் நடை பெற்று வந்த மக்கள் நலப் பணிகள் குறித்தோ, அதிகாரத்தில் இருந்து வந்தவர்கள் அடித்து வந்த கொள்ளைகள் குறித்தோ, மக்கள் வரிப் பணம் தவறான வழியில் வீணடிக்கப்படுவது சம்பந்தமாகவோ, கடந்த 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை எவ்வித தகவலும் பொது மக்களுக்கு தெரியாமலே இருந்து வந்தது.
தகவல் அறியும் உரிமை சட்டம் நடை முறைக்கு வந்த பின்னர் பொது நல விரும்பிகளும், சமூக ஆர்வலர்களும், கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் உண்மையான செயல்பாடுகளை அறியும் நோக்கோடு, இந்த சட்டத்தின் வாயிலாக பல்வேறு ஆக்கப்பூர்வமாக கேள்விகளை கேட்டு வருகின்றனர். இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக, கீழக்கரை நகராட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எவ்வித பதிலும் அளிக்கப்படாமல், மனுதாரர் (கீழை இளையவன்) மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டார்.
முதல் மேல் முறையீடு
இதனையடுத்து, கடந்த இரண்டாண்டு காலமாக, உரிய பதில் தராமல் அலைக்கழிப்பு செய்து வரும் கீழக்கரை நகராட்சியின் பொது தகவல் அலுவலரிடம் இருந்து இழப்பீடு பெற்று தரும் படி மாநில தகவல் ஆணையத்திற்கு, மனுதாரரால் புகார் செய்யப்பட்டது. அதனை ஏற்ற மாநில தகவல் ஆணையம், கீழக்கரை நகராட்சி மனுதாரருக்கு உடனடியாக பதில் அளிக்க கடந்த 22.07.2012 அன்று ஆணை பிறப்பித்தது.
ஆணை
அதன் பின்னரும் பதில் கிடைக்காததால், மீண்டும் மனுதாரரால் மாநில தகவல் ஆணையத்திற்கு புகார் செய்யப்பட்டது.
கீழக்கரை நகராட்சி மீது ஆணையத்தில் புகார்
சம்மன் (அழைப்பாணை)
தீர்ப்பு
அதில் கீழக்கரை நகராட்சி, மனுதாரருக்கு உரிய முறையில் பதில் அனுப்ப தவறியமைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 06.08.203 அன்று மனுதாரருக்கு கீழக்கரை நகராட்சி தகவல் அனுப்பியுள்ளதை ஆணையம் ஏற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் தீர்ப்பின் சாரத்தில் திருப்தியுறாத மனுதாரர் (கீழை இளையவன்) சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் (தகவல் மேலாண்மை ஒழுங்கு முறை விதிகள் 2007) பிரிவு 23 இன் படி இவ்வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பினை மறு ஆய்வு செய்ய வேண்டியும், மேல் முறையீட்டிற்கான சிறப்பு அனுமதி வேண்டியும் மாநில தகவல் ஆணையத்திற்கு மனு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.







