நம் கீழக்கரை நகரின் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சனைகளுக்கு, நிரந்தர தீர்வு காணும் நல்ல நோக்கோடு, கீழக்கரை நகர் நல இயக்கத்தின் முயற்சியில், கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்திருக்கும் அஹமது முஸ்தபா வணிக வளாகத்தில் (பாண்டியன் கிராம வங்கி அருகில்) நேற்று (31.05.2012) காலை 11 மணியளவில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை நகராட்சித் தலைவர் ராவியத்துல் கதரியா, நகராட்சித் துணைத் தலைவர் ஹாஜா முகைதீன், நகராட்சி ஆணையர் முஜீபுர் ரஹ்மான, சமூக ஆர்வலர்கள் மற்றும் பெரும்பாலான வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர் ஜனாப்.ஹமீது அப்துல் காதர் மற்றும் முன்னாள் ஸ்டேசன் மாஸ்டர் ஜனாப். செய்யது இபுறாகீம், சமூக ஆர்வலர். 'மஸ்தான்' என்கிற ஜனாப்.அஹமது இபுறாகீம், வெல்பேர் அசோசியேசன் டிரஸ்ட் பொறுப்பாளர் ஜனாப். அப்துல் அஜீஸ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் திரு.ரவி சங்கர், ஆகியோர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், கீழக்கரையின் சுகாதார பிரச்சனைகளான குப்பை மற்றும் சாக்கடை கழிவு நீர் பிரச்சனைகள், மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவாத வண்ணம் வாறுகால்களுக்கு மூடி போடுவது, கொசுக்களை ஒழிக்க தொடர்ந்து புகை அடிப்பது, வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கீழக்கரை நகருக்குள் நிழல் தரும் மரங்களை நடுவது மற்றும் பராமரிப்பது, கீழக்கரை நகருக்குள் பூங்கா அமைக்க ஏற்பாடு செய்வது போன்ற ஆக்கப்பூர்வ செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் முடிவில், தற்போதைக்கு அவசரமாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, விவாதிக்கப்பட்ட அனைத்து விசயங்களும், முழுமையாக நிறைவேற்றி தரப்படும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது போல, கீழக்கரை நகர் நல இயக்கத்தினரும், வெல்பேர் அசோசியேசன் சார்பாகவும், தங்களால் இயன்ற அளவிற்கு, அனைத்து உதவிகளும், ஒத்துழைப்புகளும் நகர் நலன் கருதி செய்வதாக உறுதி அளித்தனர்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteஉங்கள் தளம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
புதிய வரவுகள்:அஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்,கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்
எனது தள கட்டுரைகளில் சில:
அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்,பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com
மனதை கனக்கவைத்த பதிவு..