தமிழக அளவில் சிறந்த சமூக சேவகர்களுக்கான (மகளிர் நலன்) விருதான, "சிறந்த சமூக சேவகர்" விருது, கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முதல்வர் ஜனாபா.டாக்டர் எஸ். சுமையா தாவூது அவர்களுக்கு மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்களால் வழங்கப்பட்டது. மாநில அளவிலான இந்த விருதினை, சுதந்திர தின நாளன்று (15.08.2012) சென்னையிலுள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவின் போது, இவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
இந்த அளப்பெரும் விருதினைப் பெற்ற சுமையா தாவூது அவர்களுக்கு, இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் திரு. நந்தகுமார், அமைச்சர் திரு.சுந்தர்ராஜன் உள்ளிட்டோர்கள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொது நல அமைப்பினர்களும், கீழக்கரையின் முக்கியப் பிரமுகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
எதற்காக இந்த விருது ?
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த விருதுக்கு தேர்தெடுக்கப்பட்டது குறித்து கூறப்பட்டுள்ளதாவது :
இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் இது வரை 840 ஏழை முஸ்லீம் பெண்களுக்கு 18லட்சத்து 41ஆயிரம் ரூபாயை மாவட்ட முஸ்லீம் பெண்கள் உதவி சங்கத்தின் மூலம் வழங்கியுள்ளார்.
இவர் இராமநாதபுரம் மாவட்டத்தின் பெண்கள் சுய உதவு குழுக்கள் மூலம் வரதட்சனை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
சுனாமி மீட்பு திட்டத்தையும் செயல்படுத்தி வருவதோடு மட்டுமல்லாமல், 2 ஆயிரம் சுய உதவி குழு பெண்களுக்கு வருமானம் ஈட்டும் வகையில் தொழில் துவங்க பயிற்சி அளித்து வருகிறார்.
மேலும் சுய உதவிக் குழுக்கள் மூலம் குடும்பக் கட்டுப்பாடு, கண்தானம், ரத்ததானம் மற்றும் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
2007 -2009 மற்றும் 2010 - 2012 ஆகிய ஆண்டுகளில் பெண்கல்விக்கான தேசிய சிறுபாண்மையினர் கல்வியியல் நிறுவனத்தில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக பணியாற்றி வருகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விருது தவிர, மேலும் 19 பேர்களுக்கு விருதுகளும் பதக்கங்களும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அந்த விருதுகளின் விபரம் வருமாறு :
1. தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது:
(a) டி. ராஜலட்சுமி
(b) டி. சிவரஞ்சனி
2. சிறந்த மாநகராட்சி: கோயம்புத்தூர்
3. சிறந்த நகராட்சி:
(a) முதல் இடம்: பொள்ளாச்சி
(b) இரண்டாம் இடம்: தேனி அல்லிநகரம்
(c) மூன்றாம் இடம்: நாமக்கல்
4. சிறந்த டவுன் பஞ்சாயத்:
(a) முதல் இடம்: தென்கரை
(b) இரண்டாம் இடம்: முசிறி
(c) மூன்றாம் இடம்: பெருந்துறை
5. மாற்று திறனாளிகளுக்கு சேவை செய்தோர்:
(a) சிறந்த மருத்துவர்: டாக்டர் டி.எஸ். சந்திரசேகர் (Medindia Hospital, சென்னை)
(b) சிறந்த சமூக சேவகர்: ஜெயா கிருஷ்ணஸ்வாமி (சிறப்பு குழந்தைகளுக்கான மதுரம் நாராயண் நிலையம், சென்னை)
(c) சிறந்த நிறுவனம்: நேத்ரோதயா, சென்னை
(d) அதிக மாற்று திறனாளிகளுக்கு வேலை வழங்கிய தனியார் நிறுவனம்: Texmo Industries, கோயம்புத்தூர்
6. சிறந்த மாவட்ட கூட்டுறவு வங்கி: சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கி
7. பெண்களுக்கான சேவைகள்:
(a) பெண்கள் சேவையில் சிறந்த நிறுவனம்: உதகமண்டலம் சமூக நல சங்கம்
(b) பெண்கள் சேவையில் சிறந்த சமூக சேவகர்: டாக்டர் எஸ். சுமையா தாவூத் (திட்ட அலுவலர், சீதக்காதி NGO, ராமநாதபுரம் மாவட்டம்)
8. கடற்படை ஊழியர்கள் - பாராட்டு சான்றிதழ்:
(a) அப்துல் காதர் அக்பர்
(b) ராகேஷ் குமார்
(c) பல்வந்த்
(d) ராஜ் குமார் தொகஸ்
1. தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது:
(a) டி. ராஜலட்சுமி
(b) டி. சிவரஞ்சனி
2. சிறந்த மாநகராட்சி: கோயம்புத்தூர்
3. சிறந்த நகராட்சி:
(a) முதல் இடம்: பொள்ளாச்சி
(b) இரண்டாம் இடம்: தேனி அல்லிநகரம்
(c) மூன்றாம் இடம்: நாமக்கல்
4. சிறந்த டவுன் பஞ்சாயத்:
(a) முதல் இடம்: தென்கரை
(b) இரண்டாம் இடம்: முசிறி
(c) மூன்றாம் இடம்: பெருந்துறை
5. மாற்று திறனாளிகளுக்கு சேவை செய்தோர்:
(a) சிறந்த மருத்துவர்: டாக்டர் டி.எஸ். சந்திரசேகர் (Medindia Hospital, சென்னை)
(b) சிறந்த சமூக சேவகர்: ஜெயா கிருஷ்ணஸ்வாமி (சிறப்பு குழந்தைகளுக்கான மதுரம் நாராயண் நிலையம், சென்னை)
(c) சிறந்த நிறுவனம்: நேத்ரோதயா, சென்னை
(d) அதிக மாற்று திறனாளிகளுக்கு வேலை வழங்கிய தனியார் நிறுவனம்: Texmo Industries, கோயம்புத்தூர்
6. சிறந்த மாவட்ட கூட்டுறவு வங்கி: சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கி
7. பெண்களுக்கான சேவைகள்:
(a) பெண்கள் சேவையில் சிறந்த நிறுவனம்: உதகமண்டலம் சமூக நல சங்கம்
(b) பெண்கள் சேவையில் சிறந்த சமூக சேவகர்: டாக்டர் எஸ். சுமையா தாவூத் (திட்ட அலுவலர், சீதக்காதி NGO, ராமநாதபுரம் மாவட்டம்)
8. கடற்படை ஊழியர்கள் - பாராட்டு சான்றிதழ்:
(a) அப்துல் காதர் அக்பர்
(b) ராகேஷ் குமார்
(c) பல்வந்த்
(d) ராஜ் குமார் தொகஸ்
தமிழக அளவிலான விருது பெற்று நம் கீழக்கரை நகருக்கும், அவர் சார்ந்த கல்லூரிக்கும் பெருமை சேர்த்ததோடு மட்டுமல்லாமல் சமூக சேவைகளில் ஈடுபட்டிருக்கும் சமூக ஆர்வலர்களுக்கு முன்னுதாரனமாக திகழும் தாசிம் பீவி அப்துல் காதர் மகளீர் கல்லூரியின் முதல்வர் ஜனாபா. சுமையா தாவூது அவர்களுக்கும், விருதுகள் பெற்ற ஏனைய செம்மல்களுக்கும், கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment