கீழக்கரையில் பல ஆண்டுகளாக, நகருக்குள் அள்ளும் குப்பைகளை கொட்டி அழிப்பதற்கும், உரமாக மாற்றுவதற்கும் நிலையான இடம் இல்லாமல் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி சுகாதார கேடு நிலவி வந்தது. இதற்காக கீழக்கரை அருகே, நகராட்சிக்கு சொந்தமாக, தோணிப் பாலம் அருகில் சுமார் 12 ஏக்கர் நிலம் ஒன்றினை தனியார் ஒருவர் வாங்கி கொடுத்ததன் மூலம், நீண்ட கால குப்பை பிரச்சனை தீர்க்கப்பட்டது. அரசு நிதியிலிருந்து சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து சுற்று சுவர் மற்றும் உள் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டது. தற்போது குப்பைகள் முழுதும் இங்கு கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 8 மாத காலமாக குப்பைகள் பிரச்சனைகள் வெகுவாக குறைந்திருந்தது.
இந்நிலையில் தற்போது நகருக்குள் தேங்கும் குப்பைகளை முறையாக அள்ளப்படாததால், மீண்டும் தெருவெங்கும் குப்பைகள் நிறைந்து காட்சியளிக்கிறது. இதனால் கீழக்கரையில் மீண்டும் அழையா விருந்தாளியாக மலேரியா, சிக்குன்குன்யா, டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. கீழக்கரையின் முக்கிய பகுதிகளான முஸ்லீம் பஜார் (லெப்பை மாமா டீ கடை அருகில்), வள்ளல் சீதக்காதி சாலை, சேரான் தெரு பகுதி, தட்டான் தோப்பு பகுதி, புதிய பேருந்து நிலையம் பகுதி போன்ற இடங்களில் துர் நாற்றம் வீசும் குப்பைகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே குவியலாக மாறி பெரும் சுகாதாரக் கேட்டினை உருவாக்கி வருகிறது.
மேலும் கீழக்கரை லெப்பை தெரு, ஸ்டார் மெடிக்கல் அருகே அனு தினமும் வழிந்தோடும் சாக்கடையால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். சாக்கடை கழிவுகளை சாலைகளில் அள்ளி வைக்கும் துப்புரவுப் பணியாளர்கள் அதை அப்புறப் படுத்துவதில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்ட போது குப்பைகளை அள்ளும் டிரக் வண்டிகளுக்கு டிரைவர்கள் இன்னும் பணி அமர்த்தப்படாததால் தான் வேலைகளில் சுணக்கம் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். தகவல் அறியும் உரிமைகள் சட்டத்தின் மூலம் கேள்விகள் கேட்கப்பட்டதில், கீழக்கரை நகராட்சியில் 5 வாகனங்கள் இருப்பதாக தகவல் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் புதிதாக வாங்கப்பட்ட கழிவு நீர் உறிஞ்சும் மெகா சக்கர் வாகனம் உட்பட 7 வாகனங்களுக்கு, தர்மராஜ், ஐயப்பன் என்கிற 2 டிரைவர்கள் மட்டுமே இருக்கின்றனர்.
தற்போது தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் 5 டிரைவர்களை பணியமர்த்த ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இன்னும் என்ன காரணத்திற்காகவோ, நகராட்சி நிர்வாகத்தினர் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆகவே பொது மக்கள் நலன் கருதியும்,அவசர அவசியத்தின் அடிப்படையிலும்,உடனடியாக குப்பை வாகனங்களுக்கு டிரைவர்களை பணியமர்த்த வேண்டும் என்று பல்வேறு சமூக நல அமைப்பினர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- Syed Hassanali · Friends with Barakath Ali and 67 others
வெள்ளையும் சொள்ளையுமாக வீதியில் உலாவரும் கவுன்சிலர்களே முதலில் ஊரை சுத்தமாக வைத்துவிட்டு நீங்கள் வெள்ளையும் சொள்ளையுமாக வெளியில் வாருங்கள் ஊரே நாரி கிடக்குதே உங்களுக்கு வெட்கமாக இல்லை வெளி ஊரிலிருந்து ஒரு விருந்தாளியக்கூட நம்ம ஊருக்கு கூப்பிட முடியவில்லை நம்ம ஊரு நாத்தம் அவர்களுக்கும் தெரிந்துவிடுமோ என்கிற பயத்தினால் ,ராமநாதபுரத்தில் தியேட்டரில் கூட கூட்டம் கிடையாதாம் ஆனால் கீழக்கரை மக்களை நம்பி இருக்கிற ஆஸ்பத்திரிகளில் கூட்டம் வழிந்தோடுகிரதாம் இதற்க்கெல்லாம் என்ன காரணம் நமதூரில் சுத்தம் சுகாதாரம் கிடையாது ஒரு ஏழை குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் வந்தால் அந்த குடும்பத்தின் நிலைமையை கொஞ்சம் நினைத்து பாருங்கள் பணத்துக்கு என்ன செய்வார்கள் உங்களால் ஊரை சுத்தமாக ஆக்க முடியாவிட்டால் தயவு செய்து பதவியை ராஜினாமா செய்து விட்டு போங்கள் மக்களின் உயிரில் விளையாடாதிர்கள் - Syed Hassanali · Friends with Barakath Ali and 67 others
இந்த குப்பையின் பக்கத்தில் மூன்று டீக்கடை ஒரு ஜூஸ் கடை டீக்கடையில் இஞ்சி டீ கேட்டால் கிடைப்பதோ கொசு டீ தான்(விட்டமின் c )
டிரைவர்கள் கமிசன் கொடுத்ததால் பனி அமர்த்தபடுவார்கள்
ReplyDeleteடிரைவர்கள் கமிசன் கொடுத்ததால் பனி அமர்த்தபடுவார்கள்
ReplyDelete