பழைய குத்பா பள்ளி அருகே உள்ள அஞ்சு வாசல் கிட்டங்கி செல்லும் பகுதியில் காலம் காலமாக, துர்நாற்றம் வீசும் கோழிக் கழிவுகளும், மக்காத குப்பைகளும், இந்தப்பகுதியில் வசிக்கும் மக்களால் கொட்டப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கோடு கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் நகராட்சி துணைத் தலைவர் ஹாஜா முகைதீன் மற்றும் முன்னாள் வார்டு கவுன்சிலர் கிதிர் முஹம்மது ஆகியோர்களின் ஏற்பாட்டில் இந்த பகுதி இளைஞர்களை ஒன்றிணைத்து குப்பைகள் முழுவதையும் அப்புறப்படுத்தி, பொது மக்கள் அமர்வதற்கு சிமிண்டாலான இருக்கைகள் அமைக்கப்பட்டது. மேலும் அழகுச் செடி வகைகளும் நடப்பட்டு பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இது குறித்து கடந்த அக்டோபர் மாதத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி :
கீழக்கரையில் குப்பையின் கோரப் பிடியில் இருந்து புத்துயிர் பெற்ற 'அஞ்சு வாசல் கிட்டங்கி' பகுதி !
தற்போது கடந்த 2 மாத காலமாக மீண்டும் இந்த பகுதிகளில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் பறந்து கொண்டிருக்கிறது. இந்த பக்கம் கடந்து செல்பவர்கள் துர்நாற்றம் தாங்காமல் வேறு பக்கமாக சுற்றிச் செல்கின்றனர். மேலும் இதனால் நோய்கள் பரவும் அபாயமும், கடும் சுகாதாரக் கேடும் நிலவி வருகிறது. இது குறித்து உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்து, குப்பைகளை அகற்ற ஆவன செய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கீழக்கரை நகராட்சித் துணைத் தலைவர். ஜனாப்.ஹாஜா முஹைதீன் அவர்களிடம் பேசிய போது "இங்கு குப்பைகளை கொட்டுபவர்கள் வேறு எந்த மக்களும் இல்லை. இந்த பகுதியில் வசிப்பவர்கள் தான் கொட்டிச் செல்கிறார்கள். மீண்டும் குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் வகையில், கண்காணிப்பு பணிக்கு ஆள்களையும் வைத்தோம். ஆனால் எவ்வித பயனுமில்லை. இன்னும் ஓரிரு தினங்களில் குப்பைகள் அனைத்தும் அள்ளப்பட்டு, மீண்டும் இப்பகுதியில் சுகாதாரம் செழித்திட வழி வகை செய்யப்படும்" என்று ஆழ்ந்து சிந்தித்தவாறு தெரிவித்தார்.
முக்கிய குறிப்பு :
இந்தப் பகுதி, கீழக்கரை பழைய குத்பா பள்ளிவாசல் ஜமாத்தின் தற்போதைய தலைவரும், கீழக்கரை நகராட்சித் துணைத் தலைவருமான ஜனாப்.ஹாஜா முஹைதீன் அவர்களின் சொந்த வார்டுப் பகுதி என்பதும், இந்தப் பகுதியில் (9 வது வார்டு) இருந்து தான் நகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- கீழக்கரை 'புதிய ஒற்றுமை'உலகத்திலேயே நான்காவது பழமையான பள்ளியாக விளங்கும் பழைய குத்பா பள்ளியின் வளாக வெளியா இப்படி காட்சி அளிக்கிறது? பார்ப்பதற்கே மிகவும் வருத்தமாக இருக்கிறது. உடனடியாக இந்த பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் குப்பைகளை கொட்டாதவாறு, இந்த தெருவின் முக்கிய பிரதானிகள் முயற்சிக்க வேண்டும். இந்த பழமையான பள்ளி வளாகத்தின் சுற்றுப் புறத்தைப் பேண முயல வேண்டும்.
- Keelakarai Ali Batcha > HAMEED AZAR சகோதரரே தங்கள் கருத்தை வன்மையாக மறுக்கிறேன்.கீழக்கரை வெல்பேர் அசோஷியேஷன் சார்பாக அனு தினமும் குப்பை சேகரிக்க வீடு வீடாக இப் பகுதியில் துப்பரவு தொழிலாளர்ர்கள் வருகிறார்கள் என்பதற்கு தெரு மக்களே சாட்சி. மக்களிடம் விழிப்புணர்வு இல்லாதது தான் தலையான காரணம். இப்போது அப் பகுதியில் வாருகாலும் மராமத்து செய்யப்பட்டு சிமெண்ட மூடியும் போடப்பட்டுள்ளது. குறை இருந்தால் குறையை சொல்லிக் காட்டத் தான் வேண்டும். நிறை இருந்தால் பாராட்டியே ஆக வேண்டும்.
- Keelai Ilayyavan தற்போது இந்தப் பகுதியில் குவிந்திருந்த நாறும் குப்பைகள் அத்ததனையும் அள்ளப்பட்டு விட்டதாக அறிகிறேன். இதற்காக பெரும் முயற்சி எடுத்த, பழைய குத்பா பள்ளி ஜமாஅத் தலைவர். ஜனாப் ஹாஜா முகைதீன் காக்கா அவர்களுக்கு, நன்றி... நன்றி....
- Syed Abusalique Seeni Asana வாருகள் மூடி போட பட்டது.. மிக்க நன்றி.. அனால் நேற்றும் இன்றும் தெரு முழுக்க கழிவு நீரால் நாரி பொய் கிடப்பதை பார்க்க வேண்டாமா? எங்கையோ இருந்து ரோடு வழியாக ஓடு வரும் கழிவு நீர் ஒரு பஹுதிக்கு மேல் மேடை இருப்பதால் அதற்கு மேல் போக முடியாமல் தெருவெல்லாம் சேரும் சகதியுமாய் காட்சி அழிகிறது.. இது தற்போது தற்காலிக பிரச்சனை என்றாலும் மலை காலத்தில் எதுவே பெரிய பிரச்சனையாக இந்த பகுதி மக்கள் அவதி பட நேரிடும் என்பதை உணர்ந்து முழுமையாக சரி செய்து தர வேண்டும்.about an hour ago · Like · 1
- Asan Hakkim ஆஹா பார்க்கும் போதே எவ்வளவு குளுமையா இருக்கு, `இது தாண்ட கிழக்கரை` என்ற தலைப்பில் குப்பையை மையமாக வைத்து ஹாலி உட் லெவலில் ஒரு மெஹா ஹிட் படமே எடுக்கலாம் போல. வேதனை..அவமானம்...வெட்க்கம்...சீஈஈஈஈஈஈ - அன்புள்ள அசன் ஹக்கீம்%%
- Asan Hakkim இந்த குப்பை என்ன இதுக்கு மேலையும் ஆடு, மாடு, கோழி என அணைத்து குப்பை கழிவுகளையிம் கொட்டட்டும். நான் நினைக்கிறேன் இன்னும் சில ஆண்டுகளில் நமது ஊரில் பெட்ரோல் உற்பத்தி ஆகும் என் நினைக்கிறேன்.
நகராட்சி தலைவர், துணைத் தலைவர், வார்டு 7 ,8,9 மற்றும் 10 மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பழைய குத்பா பள்ளி ஜமாஅதை சார்ந்தவர்களே.
ReplyDeleteமேலும் கடந்த வெள்ளிக் கிழமை தான் சேகர் கடையிலிருந்து முன்னால் மக்கள் பிரதிநிதி கிதர் முகம்மது அவர்கள் வீடு வரையும்,பழைய குத்பா பள்ளிக்கு முன்பாகவும் வாருகால்கள் மராமத்து செய்யப்பட்டு முறையாக சிமெண்ட் சிலாப் மூடிகள் இடப்பட்டு அப் பகுதி மிளிர்கிறது.
கோடான கோடி நன்றிகள் நகராட்சி நிர்வாகத்திற்கு உரித்தாவதாக.