கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில், சிறப்பாக செயல்படட்டு வரும் ரோட்டரி சங்கத்தின் 2103 - 2014 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி, இன்று (27.08.2013) காலை 11.30 மணியளவில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஜனாப்.செ.மு. யூசுப் சாஹிப் அவர்கள் தலைமை ஏற்று இருந்தார். இராமநாதபுரம் மாவட்ட ரோட்டரி கிளப் தலைவர் ரோட்டரியன். திரு. லோகனாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர். ரோட்டரியன். ஜனாப்.அலாவுதீன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் மூன்றாமாண்டு E.C.E மாணவர் ஜனாப். யாசிர் அஹமது அவர்கள் கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் ரோட்ராக்ட் சங்கத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.


இந்த நிகழ்ச்சியில் பின் வரும் ஐந்து சிறந்த ஆசிரியப் பெருமக்களுக்கு துரோணாச்சாரியார் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதனை ரோட்ராக்ட் கிளப் சேர்மன் திருமதி.அதிசயா பாபு அவர்கள் வழங்கி கவுரவித்தார்.
1. ஜனாபா. ஹமீது நிஷா - தலைமையாசிரியை, ஹமீதியா தொடக்கப் பள்ளி, கீழக்கரை.
2. ஜனாபா. ரெஹ்னா ஜான் - வினானயகம் பள்ளி, இராமநாதபுரம்.
3. திரு. நாகராஜ் - N.C.C மேஜர் கமாண்டர், முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி, கீழக்கரை
4. திருமதி.மணிமேகலை - திருப்புல்லாணி ஒன்றிய தொடக்கப் பள்ளி
5. ஜனாபா. ஜீனத் பேகம் - சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளி, கீழக்கரை
இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் ரோட்டரி சங்க செயலாளர் ராஜா மற்றும் சுகுமார் ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிகளை ரோட்டரியன் திரு. மரியதாஸ் மற்றும் ஜனாப்.தவ்பீக் அலி ஆகியோர்கள் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் தலைவர். ரோட்டரியன் டாக்டர் செய்யது ராசிக்தீன், ரோட்டரியன் சதக்கத்துல்லா உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தகவல் : ரோட்டரியன். இஞ்சினியர் ஆசாத் ஹமீத் அவர்கள்
No comments:
Post a Comment