கீழக்கரை வடக்குத் தெருவில் கொந்தக்கருனை அப்பா தர்ஹா அருகாமையில் உள்ள ஈத்கா தொழுகை திடலில் ஆபத்தான நிலையில் தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளை சீரமைக்க கோரி, கீழக்கரை நகர் நல இயக்கத்தின் சார்பாக, நேற்று (11.10.2013) காலை 11 மணியளவில் கீழக்கரை துணை மின் நிலையத்தின் உதவி மின் பொறியாளரை சந்தித்து தகுந்த புகைப்பட ஆதாரங்களுடன் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து நாம் நேற்றைய தினம் வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழ் காணும் லிங்கை சொடுக்கவும்.
கீழக்கரை வடக்குத் தெரு தொழுகை திடலில் தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் - உடனடியாக சீரமைக்க 'கீழக்கரை நகர் நல இயக்கம்' கோரிக்கை !
இதனையடுத்து மின்சார வாரியத்தின் துரித நடவடிக்கையால், அன்றைய தினமே, மாலை 5 மணிக்குள், மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளை உயர்த்தி கட்டி, பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. இதனால் அந்தப் பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் கடமையை செவ்வனே செய்யும் வகையில், உடனடி நடவடிக்கை மேற்கொண்ட உதவி மின் பொறியாளர். திரு. பால்ராஜ் அவர்களுக்கு, கீழக்கரை நகர் நல இயக்கத்தினர் சந்தித்து, நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும் கீழக்கரை நகரில் உள்ள குறுகிய தெருக்களுக்குள் செல்லும் தாழ்வான மின்சார கம்பிகளை சீரமைக்கவும், 40 வருட பழமையான சிதிலமடைந்த மின் கம்பங்களை மாற்றக் கோரியும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் சேகு பசீர் அஹமது, பொருளாளர் ஹாஜா அனீஸ், உறுப்பினர்கள் விஜயன், முஹம்மது சாலிஹ் ஹுசைன் ஆகியோர்கள் உடனிருந்தனர்.
வாழ்க வாழ்கவே திரு. பால்ராஜ் அவர்களே.இது போல நகரில் உயிர் பலி வாங்க இருக்கும் மின் துறை சம்பந்தப்பட்ட குறைகளை நீக்க தனிக் கவனம் செலுத்தி மக்களின் அச்சத்தை நீக்க வேண்டுகிறோம்.
ReplyDelete