தியாக திருநாளை முன்னிட்டு இன்று (16.10.2013) கீழக்கரை நகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டனர். கீழக்கரை ஓடக்கரை பள்ளியில் காலை 9.30 மணியளவில் பெருநாள் தொழுகை நடை பெற்றது. தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
இந்த தியாகத் திருநாளில் கீழை இளையவன் வலை தளம் சார்பாக அனைத்து அன்புள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment