கீழக்கரையில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் அக மகிழ்வுடன் ஹஜ் பெருநாள் தொழுகையை முடித்தவுடன், வீட்டுக்கு வந்து பெருநாள் சாப்பாடு சாப்பிட்டு, இறை கடமையை நிறைவேற்றும் முகமாக ஆடு, மாடு போன்ற கால்நடைகளை குர்பானி கொடுத்து,அதன் இறைச்சிகளை குடும்பத்தார்களுக்கும்,உறவினர்களுக்கும்,ஏழை எளியவர்களுக்கும், கொடுத்து வருகின்றனர்.
அதே நேரம் KECT, TNTJ, TMMK உள்ளிட்ட பல்வேறு சமுதாய அமைப்புகள் சார்பில் கூட்டு குர்பானி கொடுக்கும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடை பெற்று வருகிறது. அங்கு வரும் ஏழை எளியவர்களுக்கு குர்பான் இறைச்சிகள் குறைவின்றி வழங்கப்பட்டு வருகிறது. கீழக்கரை நகரில் பள்ளிவாசல் தோறும் தக்பீர் முழக்கம் ஒலித்த வண்ணம் உள்ளது.
No comments:
Post a Comment