தேடல் தொடங்கியதே..

Tuesday, 16 July 2013

கீழக்கரையில் நோன்பு திறக்க பழங்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் நோன்பாளிகள் - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 4)

கீழக்கரை நகரில் ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள், நோன்பு திறக்க ஆயத்தமாகும் போது, நோன்புக் கஞ்சி தவிர, ஏனைய உணவுகளை பெரும்பாலும் வீட்டிலேயே சமைக்கின்றனர். அது போலவே ஒவ்வொரு நாளும் பழங்களும், பழ ரசங்களும் அந்த பட்டியலில் தவறாது இடம் பெறுகிறது. 




இதற்காக பழக் கடைகளுக்கு விஜயம் செய்யும் நோன்பாளிகள், உடலுக்கு குளிர்ச்சி தரும் பழ வகைகளை தங்கள் வீடுகளுக்கு வாங்கி செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். கீழக்கரை செக்கடிப் பகுதியில் உள்ள பழக் கடைகளில் ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, வாட்டர் மெலான், அன்னாசி, ஆரஞ்சு, மாம்பழம், போன்ற பழங்களின் விற்பனை அமோகமாக நடை பெற்று வருகிறது. 

கீழக்கரை ரமலான் ஸ்பெசல் பதிவுகளை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.

கீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் ! (பகுதி -1)


கீழக்கரை மசூதிகள், சங்கங்களில் வழங்கப்படும் மணம் கமழும் 'நோன்புக் கஞ்சி' - ரமலான் ஸ்பெஷல் (பகுதி-2)


கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் வழங்கப்படும் சுவைமிகு நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 3)



<<<<<  கீழக்கரை ரமலான் ஸ்பெசல் - இன்னும் வரும்.... 

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் வழங்கப்படும் சுவைமிகு நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 3)

கீழக்கரையில் மிகப் பிரம்மாண்டமான களரி சட்டிகளில் நோன்பு கஞ்சி காய்ச்சப்படுகிறது. மஞ்சள் நிறத்தில் சமைக்கப்படும் இந்த நோன்பு கஞ்சியில் சேர்க்கப்படும் வெந்தயம், பாசிப்பருப்பு, மஞ்சள், இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை,ஏலக்காய் போன்றவைகள் நோன்பாளிகளின் களைப்பை போக்குவதோடு,உடலுக்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் தருகிறது.



கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில், ரமலான் மாதம் முழுவதும் காய்ச்சப்படும் நோன்புக் கஞ்சியின் தனிச் சுவையை பருக, ஏராளமான சிறியோர்கள், பெரியவர்கள், வீட்டிலிருந்து பாத்திரங்களை கொண்டு வந்து வாங்கி செல்கின்றனர்.



கீழக்கரை நோன்புக் கஞ்சி குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த பதிவைக் காண கீழே உள்ள லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.

கீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் ! (பகுதி -1)


கீழக்கரை மசூதிகள், சங்கங்களில் வழங்கப்படும் மணம் கமழும் 'நோன்புக் கஞ்சி' - ரமலான் ஸ்பெஷல் (பகுதி-2)


<<<<<  கீழக்கரை நோன்புக் கஞ்சி மணம் - இன்னும் வரும்.... 

கீழக்கரையில் முஹைதீனியா பள்ளிகள் சார்பாக நடை பெற்ற 'கல்வி வளர்ச்சி நாள்' நடை பயணம் - ரோட்டரி சங்கத்தினர் பங்கேற்பு !

மறைந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளான, 'ஜூலை 15' ஆம் நாளை, ஆண்டு தோறும்  'கல்வி வளர்ச்சி நாளாக' கொண்டாடுவது என தமிழக அரசு முடிவு செய்து,அது அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் கல்வி குறித்த பேச்சுப் போட்டிகள், கட்டுரை போட்டிகள், வினாடி - வினா போன்றவை நடத்தப்பட்டு, மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நேற்று (15.07.2013) காமராஜரின் 107வது பிறந்த நாள் ஆகும்.


இந்நிலையில் கீழக்கரை வடக்குத் தெரு முஹைதீனியா மெட்ரிக்
இந்நிலையில் கீழக்கரை வடக்குத் தெரு முஹைதீனியா மெட்ரிக் மேனிலைப் பள்ளி மற்றும் முஹைதீனியா நடுநிலைப் பள்ளிகளின் சார்பாக, கல்வி வளர்ச்சி நாள் தொடர் நடை பயணம் நேற்று காலை 10.30 மணியளவில் நடை பெற்றது. இதனை கீழக்கரை காவல் துறை துணை கண்காணிப்பாளர். திரு.சோம சேகர் மற்றும் காவல் துறை ஆய்வாளர். திரு.கணேசன் ஆகியோர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர். 

இதில் நூற்றுக்கணக்கான முஹைதீனியா பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்று, கல்வியின் முக்கியத்துவம் குறித்த பதாகைகளை ஏந்தியவாறு, கல்வி விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். கீழக்கரை முக்கு ரோடு பகுதியிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் வள்ளல் சீதக்காதி சாலை, நடுத் தெரு பாபு ஆட்டோ ஸ்டாண்ட், தெற்குத் தெரு வழியாக முஹைதீனியா பள்ளியை சென்றடைந்தது.



இந்த தொடர் நடை பயணத்தில் முஹிதீனியா கல்விக் குழுவின் தலைவர் முஹைதீன் இபுறாஹீம், செயலாளர் .டாக்டர் ராசிக்தீன் (கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவர்), உதவி செயலாளர் அஹமது மிர்ஷா, பொருளாளர். பசீர் அஹமது,  ரோட்டரி சங்க செயலாளர் சுப்ரமணியன், முன்னாள் ரோட்டர சங்க தலைவர். ஆசாத் ஹமீத், ரோட்டரியன் நூர் ஆப்டிகல்ஸ் ஹசன், ரோட்டரியன் இண்டோ அராப் சதக்கத்துல்லாஹ், கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் ஹாஜா அனீஸ், மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் பொருளாளர். முஹம்மது சாலிஹ் ஹுசைன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

FACE BOOK COMMENTS :

Like ·  · Unfollow Post · Share · Edit

Monday, 15 July 2013

துபாயில் 'சென்னை புதுக்கல்லூரி' இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (NCIM) முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி !

சென்னை 'புதுக்கல்லூரி' இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (NCIM) பயிலகத்தில், (கடந்த 2000 - 2002 ஆம் ஆண்டில்) M.B.A., முதுகலை பட்டம் பெற்று, துபாயில் பணி புரியும் நண்பர்களின் சந்திப்பு நிகழ்ச்சி, கடந்த வாரம் துபாய் லேண்ட் மார்க் ஹோட்டலில் சிறப்பாக நடை பெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நண்பர்கள், தாங்கள் பயின்ற காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். தற்போது பணியாற்றும் நிறுவனம்  மற்றும் தங்கள் வாழ்க்கை முறையை பற்றி பகிர்ந்து கொண்டனர். 



இந்த நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் கீழக்கரையை சேர்ந்த ஜமீல் முஹம்மது, அப்துல் பாஸித்,  ஹமீது இர்பான், ஹபீல், அஹமது ஹுசைன், அஹமது சுஹைல், சென்னையை சேர்ந்த முஹம்மது அல்தாப், அப்ரோஸ் அஹமது, அதிராம்பட்டினம் முஹம்மது நெய்னா  உள்ளிட்ட நண்பர்கள் பலர் பங்கேற்றனர். 

மேலும் உலகெங்கும் வாழும் தங்கள் சக நண்பர்களை ஒருங்கிணைத்து, விரைவில் ஒரு மாபெரும் சந்திப்பு நிகழ்ச்சியை, துபாயில் நடத்தி, பல்வேறு ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை மேற்கொள்ள ஆலோசனையும் நடை பெற்றது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியை நண்பர். ஜமீல் முஹம்மது ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.