நம் கீழக்கரை நகரின் மிக மூத்த குடிமகனும், எதிர் கால இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த உழைப்பின் சிகரம், பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த 'செய்யாப்பா' என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இளைஞர். செய்யது அபுதாகிர் அவர்கள் நேற்று (24.06.2012) காலை 11 மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).
இது குறித்து செய்யாப்பா அவர்களின் பேரன் ரிபாய்தீன் அவர்கள் கூறும் போது "எப்போதும் எறும்பு போல சுறு சுறுப்பாக உழைத்த எங்கள் செய்யாப்பா கடந்த வாரம் தூங்கும் போது, கட்டிலில் இருந்து விழுந்ததில் மூர்ச்சையுற்றார்கள். அன்றிலிருந்து சுய நினைவிழந்து நேற்று இறைவனடி சேர்ந்தார்கள். செய்யாப்பாக்கு பீடி, சிகரெட், குடி என்று எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. தங்கள் நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்துக்கும் காரணங்களை அவர்களிடம் கேட்கும் போதெல்லாம் நல்ல எண்ணங்களும், அல்லாஹ்வின் நாட்டமும் தான் என அடிக்கடி கூறுவார்கள்" என்று தெரிவித்தார்.
செய்யாப்பா அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று (24.06.2012) மாலை அஷர் தொழுகைக்கு பின்னர் 4.30 மணியளவில் பழைய குத்பா பள்ளி மைய வாடியில் நடை பெற்றது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். எல்லாம் வல்ல இறைவன் அன்னாருடைய நல்லறங்களை அனைத்தையும் அங்கீகரித்து, பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் எனும் சுவர்க்கத்தில் நுழையச் செய்வானாக!ஆமீன்.
May “Almaighity Allah” Forgive her known n unknown SINS and grant her JANNAH.AAMEEN.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்
ReplyDelete